ஸ்ருதி மாதா!

ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அரங்கேற்றம் பண்ணனும்னா ,மொதல்ல சுருதி சுத்தம் என்கின்ற பாஸ்போர்ட் வேண்டும்.Pitch Perfection should be 100% in that system of music.
வளரும் கலைஞர்கள் கூட அவ்வளவு அழகாக ஸ்ருதி சுத்தத்துடன் பாடுகிறார்கள்.
கர்நாடக சங்கீதத்தில் ஸ்ருதி முன்ன பின்ன இருந்தாலும் கச்சேரி நடக்கும். கைதட்டலும் விழும்.இன்று இருக்கும் மிக மிக பிரபலமான பாடகர்களும் கூட ஸ்ருதி சுத்தத்தில் ,அவ்வளவு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.கோட்டை விடுகிறார்கள்!
இந்த நிலை எப்பொழுதுதான் மாறும் என்ற கேள்வி ,பல வருஷங்களாக என் மனதில் ஒடிக் கொண்டிருக்கிறது.
கான கலாதர் ஸ்ரீ மதுரை மணி ஐயர் ஸ்ருதி சுத்தத்துக்கு பெயர் போனவர்.மேற்கே சூரியன் உதித்தாலும் உதிக்கலாம்.மணி ஐயர் சுருதி விலகாது!
அவருடைய பாட்டைக் கேட்டப் பிறகு, இரண்டு மூன்று நாளைக்கு வேற எந்த பாடகர் பாட்டையும் கேட்க பிடிப்பதில்லை. அப்பேர்பட்ட மிக உயர்ந்த சங்கீதம் அவருடையது.
வடக்கே ஒரு பர்வீன் சுல்தானா!
ஹை பிட்ச்சில் அவர் பாடும் பொழுது மனித குரலா அல்லது வாத்யத்தில் இருந்து வரும் சங்கீதமா என்று வியக்கத் தோன்றும்.
ஸங்கீதத்திலும் கிரிக்கட்டிலும் Perfect Pitch இருந்தால் சோபிக்கும்.
தோற்ற குழுவின் கிரிக்கட் வீரர்கள் வழக்கமாக சொல்லும் ஒரு காரணம்
பிட்ச் சரியில்லை!
கச்சேரி சரியாக அமையாவிடில் ரசிகர்கள் முணுமுணுப்பது இன்னிக்கி பாடகருக்கு ஸ்ருதியே சேரல!
போதிய இடைவெளி இல்லாமல் கச்சேரி ஒத்துக் கொண்டால் ஸ்ருதி பாக்ஸ் மக்கர் செய்யும்.கவனம் தேவை!
இன்றைய பிரபல பாடகர்களுக்கும் ஸங்கீதம் கற்பிக்கும் குருக்களுக்கும் மிகப் பெரிய பொறுப்பு உள்ளது.
ஸ்ருதி மாதா மிக மிக முக்கியம் என்பதை பயிலும் மாணக்கர்களுக்கு ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி கொண்டே இருங்கள்.
ரசிகஸிகாமணிக்களுக்கும் பொறுப்பு உள்ளது.ஸ்ருதி விலகி பாடினால் அந்த உருப்படிக்கு, கைதட்டுவதையோ அல்லது ஆன்லைன் கச்சேரிகளில் கமெண்ட் வழியாக பாராட்டுவதையோ உடனடியாக நிறுத்துங்கள்.
அப்பொழுதான் ஸ்ருதி சேரும்!

Comments

Popular posts from this blog

Quality of Music!

கச்சேரி அமைத்துக் கொள்வதெல்லாம்!!