கச்சேரி அமைத்துக் கொள்வதெல்லாம்!!
கச்சேரி அமைத்துக் கொள்வதெல்லாம்!!
ஒரு மாமாங்கம் முன்னால் நடந்த கச்சேரி இது.
திரை விலகியது!
விதூஷி பஞ்சு மிட்டா கலர் புடவை, மயில் கழுத்துக்கலர் ரவிக்கை.
சுமார் 2 லகரத்துக்கு ஆபாரணங்கள் ஜொலித்தது.
பிடில் வித்வான் வெங்காயகலரில் ஜிப்பா.
மிருதங்கம் மஞ்சா கலரில் ஜிப்பா.
கடம் ஆண் மயில் கழுத்துக்கலரில் (ஒடி வந்து அடிக்கற blue color) ஜிப்பா.
தம்பூரா மாமியும் நீலக்கலர் புடவை.
கரகாட்ட கோஷ்டியைப்பார்த்த மாதிரி இருந்தது.
பாடகி 'ஜில் ஜில்' ரமாமணியை நிணைவுப்படுத்தினார்.
கடம் வித்வான் ஏன் இரண்டு பாணை வைச்சிருந்தார் என்ற கதைக்கு அப்புறம் வரேன்.
பாடகியின் கணீர்ர்ர் குரல் ஆரம்பம்.
ஹார்லிக்ஸ்+பூஷ்ட்+காம்ப்ளான் காக்டையில் சாப்பிடறாரா?
கிரக ராசி பலன் சரியா அமையல்லனா அன்னிக்கி ,சாரீரம் திடீர்னு பல்லவன் பேருந்து மாதிரி மக்கர் பண்ணிடும்.
சாரீரம் அம்பேல்.
சரீரத்திலியும் ரோகம்.
ராகம் எடுபடல.
ஆரம்பித்திலேயே Nose Clearing activity ஆரம்பிச்சாச்சு.
ஒரு டப்பா tissue paper காலி. சிந்தி சிந்தி paper ய சந்து வழியா கடம் வித்வான் பக்கம் பாடகி supply செய்த வண்ணம் இருந்தார்.
இரண்டாவது பாணை அதை போடுவதற்குதான் போலும்.
ராக ஆலாபணையின் போது 'உவ்வே' என்று இழுத்தார்.
பிடில் வித்வான் ,ஏற்கனவே மேடையின் விளிம்பில் இருந்தவர் மிரண்டு போய், ரிவர்ஸ் கியரில் இன்னும் தள்ளிப்போனார்.
நடுவில் மைக்கில் பாடகி அறிவித்தார் 'இந்த கச்சேரிக்கு முன்னால் நிறைய கச்சேரி பாடினேன்.
அதான் இங்க வரச்சே கொஞ்சம் தொண்டை கம்மிடித்து.
தருமி நாகேஷ் டயலாக்தான் ஞாபகம் வந்தது.
ஏய் பட்டுடுத்திய புலவா!
எங்க இருக்கே?
கத்தி கத்தி தொண்டயும் போயிடுச்சு!
ஆலாபணை பாடறச்சே பண்ற அபிநயம் இருக்கே...கை வீசம்மா கை வீசு type..மிருதங்கம் வரைக்கும் கை நீள்றது.
மேல் பஞ்சமத்தை தொடுவதற்க்கு முன்,இரண்டு காலையும் முட்டி போடற அளவுக்கு தூக்கி (காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே..யதுகுல காம்போஜி) try பன்றா..அடுத்தது நான் பயந்தது அவர் top octave போகச்சே அநேகமா mike ஐ பிடிச்சிண்டு எழுந்துடப்போறான்னு.
நல்ல வேளை அந்த மாதிரி நடக்கல.
அதுக்குப் பதிலா ,இப்ப அவர் எதிர்பார்க்கிற சங்கதி வரற்துக்கு, 'சாய்ஞ்சாடம்மா சாய்ஞ்சாடு' ஆரம்பிச்சுட்டார்.
மைக்லேர்ந்து பின்னோக்கிப் போய் டிரை பண்ணி வரல்லேனா,முன்னாடி வந்து,அந்த பிடியை ஒரு பிடி பிடிக்கற்து.
இந்த மாதிரியே கபடி கபடி ஆட்டம் கச்சேரி முடியறவரைக்கும் தொடர்ந்தது.
அபிநய சரஸ்வதி பட்டம் நிச்சியம் குடுக்கலாம்.
ராக ஆலாபணையின் போது,ரண்டு கையையும் தூக்கி தலைல அடித்துக் கொள்வது போல பாவணை.
நாமதான் அதைப் பண்ணனும்!
ஸ்ருதி அடிக்கடி derail ஆறது..மந்தர ஸ்தாயில் போரேன்னு போயி (தோடியில்) பாதாள லோகத்துக்கே போயிட்டார்.அப்புறம் பாதாள சங்கிலியை பிடித்துக்கொண்டு சமத்துக்கு வந்து விடட்டார், எப்பிடியோ.
என்னாத்துக்கு இவ்ளோ கச்சேரி commit செய்னும்.?
படு அவஸ்தை!
இப்ப என்னாதான் பாடினாங்கற்துக்கு வாரேன்.
முதல்ல 'எவரி போத' வர்ணம் by பட்டிணம் சுப்ரமணிஅய்யர் ஆபோகி ராகத்தில்.
அடுத்தது அருணாச்சல நாதம் by தீக்ஷிதர் சாரங்கா ராகம்.
அடுத்த ராக ஆலாபணை ஹரிகாம்போஜி எந்துக்கு by தியாகராஜர்.
நிரவல் in charanam 'dharalo'..
நிஜமாகவே இந்த உருப்படி உருப்பட்டா மாதிரி இருந்தது.
சறுக்கல் தோடியில்தான்.
மிடியல.
'கஜவதனா' கிருதி by குமார எட்டேந்திர பூபதி.
வயலினிஸ்ட் நிறைய அப்லாஸ் வாங்கி பேக்கட்ல போட்டுண்டார்.
மாஞ்சி ராகம் ஆளை மயக்கும் உருக்கும் சாய்ச்சுடும்,
நான் பாடினா கூட!
ப்ரோவம்மா தாமஸமேன் மிக அழகான கீர்த்தணை by ஷ்யாமா ஸாஸ்திரி..
நன்னாவே பாடினார்
சிம்மேந்திரமத்திமம் RTP கஷ்டப்பட்டு சுமாரா பாடி ஒப்பேத்தியாச்சு.
but பாதி பேர் கேண்டினில் அரட்டை கச்சேரி!
box office hit க்காக voice box கிட்ட விளையாடலாமா?
ப்டாது.
Comments
Post a Comment