Tie Another Day!
Tie Another Day!
Oct 2015
நான் ஆபீஸில் மும்முரமாக(?) வேலையில் மூழ்கியிருந்த போது, செல்போன் சிணுங்கியது.
ஹலோ! ஆர் யூ மிஸ்டர் நாராயணன்?
என்று ஒரு பெண்மணியின் குரல்.
ஆமாம் என்றேன்.
நான் Bahrain லிருந்து பேசுகிறேன்.
ஆர் யு இண்டரஸ்டட் டு வொர்க் இன் பஹ்ரைன்? தெளிவான உச்சரிப்புடன் கேள்வி வைக்கப்பட்டது.
அனிச்சையாக உடனே 'ஆம்' என்றேன்.
பிறகு ஒரு நன்னாளில் Skype interview with an European officer of that company ..சுமார் இரண்டு மணி நேரம் வெற்றிகரமாக நடந்தது.
அவர் மிக்க மகில்ச்சியாகி , ஜூட் ன்னு சொல்லிட்டார் மேலிடத்தில்.
சில நாட்கள் கழித்து மறுபடியும்
ட்ரிங் ..டிரிங் ..அதே பெண்மணி.
நீங்கள் செலக்ட் ஆகி உள்ளீர்கள்!
அதனால் எங்க கம்பேனி முதலாளி உங்களை நேரே பார்த்து பேச விரும்புகிறார் before giving appointment order .
ஆகவே பஹ்ரைனுக்கு வர முடியுமா?
சரி...சரி...வரேன்! என்றேன்.
மொதலாளியை வேற பார்க்க போறீங்க..சூட்,கோட் ,டை சகிதம் தான் பஹ்ரைன் க்கு போகனும்னு வீட்டில் ஷ்ட்ராங்கா சொல்லிட்டாங்க.
இல்லாக்காட்டி வேலை கிடைக்காதுன்னு பயமுறுத்தல் வேற!
இது என்னடா சோதணைன்னு நிணைத்தேன்!
என் ஜான்வாசத்துக்கு அப்புறம் அந்த நாகரீக சமாச்சாரம்லாம் அணிந்ததே இல்லை.
நேக்கு அந்த நாகரீக உடை லாம் அவ்ளவா பிடிக்காது கூட.
Oracle Value Chain Seminarல Guest Speaker ஆ இரண்டு முறை பேசும் போது கூட பேண்ட் ஷர்ட்தான்.
No Tie.
டை (Tie) கட்டவே தெரியாது!!
எப்பவோ சிங்கப்பூருக்கு அலுவலக விஷயமாபோன போது வாங்கின கோட் இன்னும் புதுஸாவே(!) இருந்தது.
கைவசம் இருந்த Tie க்கு Dye போட்டால்தான் யூஸ் பண்ணமுடியும் போல் சோகையாக இருந்தது!
ஆகவே கடைக்கு போய் ஒரு டை (Tie) மாத்திரம் வாங்கினேன்.
அந்த கடையின் சிப்பந்தியிடம்
'அப்படியே அதை கழுத்தில மாட்டிக்கறமாதிரி' செஞ்சி குடுன்னு கேட்டு வாங்கி வந்துட்டேன்.
வந்து சர்வ ஜாக்ரதையா டையை கலையாம பெட்டியில் வைத்தாகி விட்டது.
ஆச்சா!
போக வர ப்ளேன் டிக்கட்,விசா,டாக்ஸி, ஹோட்டல்,உணவு ...எல்லாம் அவா செலவு.

ஒஸியில் பஹ்ரைன் திக்விஜயம்!

மொத நாள் ராத்திரியே பஹ்ரைனுக்கு போய் சேர்ந்தாச்சு.
மறுநாள் காலை கம்பேனிக்கு புறப்பட தயாரானேன்
Tie ஐ எடுத்து பார்த்தால் ' திக்' கென்று இருந்தது.
அப்படியே கழுத்தில் மாட்டுகிறா மாதிரி முன் யோசணையா set up செஞ்சதெல்லாம் கலைந்து போய் விட்டது!
சட்டென்று சுதாரித்துக் கொண்டு
"How to Tie a Tie- Windsor Knot" ன்னு
'நீ குழாய்' யில் Video வை பார்த்து Tie
ஐ கட்ட முயற்சி செய்தேன்.
ம்ஹூம்.ஒன்னியும் வேலைக்கு ஆகல.
கர்சீப்பை தாறுமாறா கழுத்தில் கட்டின ரவுடி மாதிரிதான் இருந்தது.
டயம் வேற ஆயிண்டிருக்கு!
ம்ம் ...பார்த்துக்கலாம்னு Tie யை பாக்கெட்ல வச்சிண்டு, லாபிக்கு வந்தேன்.
அழகான Fillipino Girls ரிசப்ஷனில், புன்சிரிப்படன் காலை வணக்கத்தை தெரிவித்தார்கள் ,ரூம் சாவி அட்டையை வாங்கிக் கொண்டு.
லாபியில் அமர்ந்து கொண்டேன்.
இன்னும் சிறிது நேரத்தில் கம்பேனி கார் வந்து விடும் அழைத்து செல்ல.
Tie கட்டாமல் எப்படி அரபி ஷேக் முதலாளியை சந்திக்கிறது?
குயிக்காக யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தேன்!
கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரிசப்ஷன் பெண்மணியிடம் சென்று,
'இங்கு எனக்கு யாராவது Tie கட்டி விடுவார்களா?' என்று வினயத்துடன் வினவினேன்.
Ofcourse Sir ,I will immediately arrange ன்னு பதில் வந்தது.
Pronto! ஒரு சிப்பந்தி வந்தார்.
பக்கத்தில் இருக்கும் அறைக்கு அழைத்து சென்று ,மிக நேர்த்தியாக நான் கேட்டுக் கொண்டபடி, 'இறுக்கமாக' Tie ஐ tie பண்ணி விட்டு சென்றார்.
அவருக்கும் லாபியில் இருந்த பெண்மணிக்கும் நன்றி கூறினேன்.
Anything else sir?
வீட்டில் Tie கட்டிக் கொண்டு தான் முதலாளியை பார்க்க சென்றேன் என்பதற்கு proof ஆக ஒரு foto வேணுமே?
Can you please take a photo?
Ofcourse Sir.
அந்த பெண்மணி எடுத்த போட்டாதான் இது.
Comments
Post a Comment