Online Live Kutchery --Comments Section
Online Live Kutchery --Comments Section
ஆர்ட்டிஸ்ட் தம்பூராவில் ஸ்ருதி சேர்த்திண்டிருக்கார்.
Rasika # 1 comment: Amazing!
Rasika # 2.Comment:இன்னும் கச்சேரியே ஆரம்பிக்கல! அதுக்குள்ளேயும் என்ன அமேசிங்! வேண்டியிருக்கு இப்போ?
*******
கச்சேரி நன்னா போயிண்டிருந்தது.
பல ரசிகர்களின் எக்ஸ்பிரஸ் கமெண்ட் பறந்தது.
ஆஹா ,ஒஹோ, பேஷ் ,பேஷ் ,வெரி நைஸ் ஆசெம் இத்யாதி ,etc.,
ஒரு ரசிகர் செம்ம கடுப்பாகி, "கமெண்ட்டெல்லாத்தியும் இப்போ சித்த நிறுத்தறேளா?
நல்ல பாட்டை கேட்க விடுங்கோ என்னை!"
உடனே பல ரசிகாள்ஸ்
'நன்னாயிருந்தா சுடச்சுட எங்களோட மகில்ச்சியை தெரிவிப்போம்!
அது எங்கள் உரிமை!
நீர் யார் எங்களை தடுப்பதற்கு!
அவர் திருப்பியும் Stop It! Stop It! ன்னு எதிர்க்குரலை எழுப்பினார்.
இப்போ அதை பார்த்தவுடனே வாழ்க்கையில ஒரு முறை கூட கமெண்ட்டே அடிக்காதவாள்லாம், மள மளன்னு பத்து கமெண்ட்டை போட்டா.
இப்போ Screen சர் சர்ன்னு அதி வேகமாக scroll ஆச்சு.
Speed Post!
ஒரே பழிச் சண்டை!
கேஸ் ப்ரீவி கவுன்ஸிலுக்கு போச்சு.
ஆச்சா!
ஒரு மத்யஸ்தர் வந்தார்.
அவரோட மேலான தீர்ப்பு இதுதான்.
அந்த கோபக்கார ரசிகரை tag செஞ்சு,
"ரசிகர்கள் பாராட்டை தடுக்க கூடாது.
உமக்கு பிடிக்கலன்னா,நீர் right sideல swipe செய்யுங்கோ!
எல்லா கமெண்டும் மறைஞ்சுடும்.
இனிமே உமக்கு கமெண்ட்லாம் தெரியாது.
இப்போ கச்சேரியை உமக்கு பிடித்தா மாதிரி கேட்டு அனுபவியும்!"
அவ்ளவுதான்! அந்த ரசிகர் கப் சிப்!
இந்த கூத்து நடந்து பிறகு.
ஒருத்தர் நான் trust க்கு பணம் அனுப்பியுள்ளேன்.
இதோ என் ஈ மெயில் ID.
இதுக்கு IT exemption certificateஐ அனுப்ப முடியுமா?
அதுக்கு ஒருத்தர் இதைல்லாம் கச்சேரி நடுவில கேட்டு ஏன் டிஸ்டர்ப் பண்ணுகிறீர்கள்?
ப்ரைவேட் மெஸேஜ் அனுப்ப வேண்டியதுதானே?
*******
சில ரசிகர்களுக்கு பரந்த மனஸூ.
பெரிய பலாப்பழம்
சைஸுக்கு இருக்கிற emoticon ஐ செலக்ட் பண்ணி அவர்களுடைய குஷி களை பதிவு செய்வார்கள்.
அது நம்ம screen ஐ பாதி அடைத்துக் கொண்டுவிடும்!
******
இன்னொரு ரசிகர் மத்யமாவதியும் தர்பாரி கானடாவும் similar ராகமா என்பதை யாராவது ஊர்ஜிதபடுத்த முடியுமா என்று படுத்தறார்!
**********
அடுத்தது ,கச்சேரி ஆரம்பித்த வுடனேயே ஒரு கோஷ்டி வரும்.
பரஸ்பரம் குசலம் விசாரிப்புகள்.
குட் மார்னிங் குட் ஈவ்னிங் வெல்கம் பெஸ்ட் விஷஸ் இத்யாதி..
எங்கே இன்னிக்கி அந்த ரசிகரை இன்னும் காணோம்?
டாண் னு வந்து விடுவாரே?
*******
பாடகர் ராக ஆலாபணையை ஆரம்பித்தவுடனே,
இது கீரவாணி
இது சிம்மேந்திர மத்திமம்
இது முகாரி
இல்லே பைரவி மாதிரி இருக்கு.
நான் தான் முதல்லயே சொன்னேனே
முகாரி தான்னு!
ராகம் guessing game முடிந்தவுடன்,
கீர்த்தணை guessing game ஆரம்பம்.
நிச்சியமா பாலகோபால தான் வரும் MSD கீர்த்தணை.
இல்லை..உபசாரமு ஜேசே தான் இருக்கும்.
கொலுவையுன்னாடே பாடப் போறார்!
யாரோ இவர் யாரோ தான் இருக்கும்!
கடைசியில் மேற்கண்ட பட்டியிலில் இல்லாத ஒரு கீர்த்தணையை பாடகர் பாடி விட்டார்!
*******
ஒரு ரசிகர் இந்த பாட்டை அந்த பாடகர் பாடி கேட்கனும்!
அதுக்கு உடனே இன்னொருத்தர்
அந்த மாதிரிலாம் கம்பேர் பண்ணக்கூடாது.
அவர் வேற!
இவர் வேற!
let us enjoy this music! ன்னு முத்தாய்ப்பு வைத்தார்.
ஆக செம்ம ரகளைதான் போங்கோ!
சபாக்கச்சேரிக்கு இணையாக இங்கேயும் கச்சேரி வம்புகள் இருக்கு.
என்ன நாஞ்சொல்றதை கேட்டேளா?
Comments
Post a Comment