Cyclotron-2
Cyclotron
Cycle Brand ஊதுவத்தி மணம் கமிழ்கிறது.
காற்றினிலே வரும் கீதமாக காபி ராகம்,
ஜெயந்தி குமரேஷ் வீணையிலிருந்து.
கள்ளிச்சொட்டு டிகிரி காபியுடன் இந்த ரண்டாவது பாகத்தை தொடர்கிறேன்.
முதல் hire cycle கடையில் நான்
ஒரு L board என்பதால் வண்டி குடுக்கப் படவில்லை என்பது தெரிந்ததே!
நன்கு ஓட்ட தெரிந்த சீனியர் நண்பன் உதவியுடன் சைக்கிளை எடுத்து ,இரண்டு தெரு தள்ளி ஓட்ட ஆரம்பித்தேன்.
சில சமயம் ஒரு லொடக்கானி சைக்கிள்தான் கிடைக்கும். அதில் செயின் பாதி நேரம் கழன்று விடும் அதை சரி செய்வதிலேயே பாதி நாழி காலி.
ஒரு சில நம்பர் போட்ட வண்டி நன்னா ஓடும். காத்திருந்து அதை எடுப்போம்.
மாடியாத்து நரசிம்மன்தான் எனக்கு வாத்யார்.
ரோடில் கூடவே என்னிய பிடிச்சிண்டு ஓடி வருவான். அவன் மேலேயே சாஞ்சாலும் நிமிர்த்தி ஓட்ட வைப்பதில் சமர்த்தன்.
அவன் கூடவே வரான்ற தெகிரியத்தில
சுமாரா ஒட்டும் போது ,சட்டென்று காணாம போய்டுவான்.
கேட்டால் டேய் ..அப்பத்தான் நீயி கத்துப்பே!
அந்த சமயத்தில் கூடுதல் திகில் கவ்வும்.
நிறைய தடவை யார் மேலயாவது மோதுவது வாடிக்கையான சம்பவமானது.
மோதுவதற்கு சில விநாடி முன்.....கண்ணிலிருந்து மூளைக்கு அபபாய செய்தி பறந்து ,அது உடனே 'டேய் பிரேக்கை அமுக்கு,பெடல் பண்றத நிறுத்துன்னு' கட்டளை பிறப்பித்தாலும், மின்னாடி போற ஆசாமியை பார்த்தப்பறம் , முதலில் மனஸ்ல தோனுவது 'இவர் ஏன் இன்னிக்கின்னு பார்த்து நான் சைக்கிள் கத்துக்கச்சே ரோடுல நடக்கிறார்?' சே..
புத்தி vs மனஸு!
சரி ..மணியை அடிப்போம்னு பார்த்தா, சித்த நாழி வரைக்கும் ஊரே கேக்கற மாதிரி அடித்த,அந்த பாழாய்ப் போன மணி அடிக்கவே அடிக்காது.
மணி அடிக்கவே இல்லைன்ற பயத்தில், கையும் காலும் ஓடாத தருணத்தில், நேரே அந்த ஆசாமி மோதி சைக்கிளுடன் கீழே விழுவேன்
செம்ம திட்டு அல்லது குட்டு கிடைக்கும்.
கீழே விழுந்து சிராய்ச்சுண்டு கொஞ்சம் ஒரு மாதிரி நடந்து ஆத்துக்கு நுழையச்சேவே, பாட்டியின் கழுகுப் பார்வையில் பட்டேன்.
டேய் பத்ரி..எங்கடா அடி பட்டுண்டே? எங்கே காட்டுன்னு இடது காலை நன்றாக அழுத்தி பிடித்துக் கொண்டு வலது காலை காட்ட சொன்னாள்.
அழுத்தி பிடித்து கொண்ட இடது காலில்தான் செம்ம செம்ம வலி மற்றும் இரத்த சிராய்ப்பு.
பல்லை கடித்து கொண்டு வலது காலை நீட்டினேன்..லேசான காயம்தான்.மஞ்சளை தேய்த்து போட்டு விட்டாள்..தப்பித்தேன்!
சைக்கிள் அட்வெஞ்சர் காயம் கன்ஸீல்டு வெல்.
டிராபிக்கில் கத்துக்கற்து சரிப்படல.
நண்பன் நரசிம்மன் வாடா! நம்ம My Ladies Garden க்கு போய் கத்துக்கலாம்.அதான் அந்த Madras Zoo க்கு பின்னாடி இருக்குமே அதேதான்.
ஆள் நடமாட்டம் இல்லாத பூங்கா.
கொஞ்சம் சுமாராக ஒட்ட வந்த பிறகு ,வீட்டு பக்கத்திலேயே டிராபிக்கில் ஒட்ட ஆரம்பித்தோம்.
அண்ணா பிள்ளை தெரு ,தங்க சாலை வழியாக ,பிராட்வே டாக்கீஸ் வரை சென்று ,யார் முதலில் திரும்பி வருவது என்ற போட்டி நடக்கும் நான்கு சகாக்களுக்கிடையே!
இந்த வீர தீர சாகஸம் லாம் வூட்டுக்கு தெரியாது.
ஒரு நாள் மும்முரமான சைக்கிள் ரேஸில் ஹை ஸ்பீடில் போற என்னிய பார்த்து விட்டாள் பாட்டி.
ஆத்துக்கு உள்ளே நுழைஞ்ச வுடனே லக்ஷார்ச்சணை ஆரம்பம்.
இரு இரு..அப்பா வரட்டும்!
இன்னிக்கி அவன் கிட்ட சைக்கிள்ளாம் ஆத்தில பர்மிஷன் வாங்காம ,டேஞ்சரஸா டிராபிக்ல ஓட்றேன்னு சொல்லி ,இதுக்கு ஒரு முடிவு கட்றேன் என்று சூளூரைத்தாள்.
ம்ம் ..சாயங்காலம் இருக்கு இன்னிக்கி சரியான கச்சேரின்னு நிணைத்தேன்.
சித்த நாழியாச்சி.
நரசிம்மன் பாட்டு பாடிண்டே ஜாலியா எங்க போர்ஷனில் நுழைந்தான் உற்சாகமாக!
பாட்டி: ஏன்டா இது உன் வேலையா? அவன் கேட்டான்னா ,உடனே நீ சைக்கிள் ஒட்ட கத்துக் குடுப்பியா?அதுவும் இந்த டவுண் டிராபிக்ல?
ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுனா என்ன பன்றது?
இரு உங்க அம்மா கிட்ட சொல்றேன் நீ செஞ்ச காரியத்தை.
அவன் Ben Jhonson கணக்கா ஒடியே போயிட்டான் மாடிக்கு.
அப்பா வந்தா.
இந்த மாதிரி தருணத்தில் புஸ்தகத்தை எடுத்து படிக்கிற மாதிரி ,பாவ்லா பன்றது ஒரளவுக்கு காப்பாத்தும்.
பாட்டி FIR ஐ படித்தாள்.
நான் அந்த காலத்து மாட்டுப்பெண் மாதிரி குனிந்து தலை நிமிரவில்லை.
காதை கூர்மையாக்கி கொண்டேன்.
திக் திக் திக் மொமண்ட்டு.
அப்பாவின் தீர்ப்பு:
இந்த வயஸுல சைக்கிள் கத்துக்காம, முப்பது வயஸுலயா அவன் கத்துக்க முடியும்?
டேய் பத்ரி ..ஜாக்ரதையா ஒட்டுடா.என்ன..
கேஸ் டிஸ்மிஸ்டு!
பாட்டி: ஞே என்று விழித்தாள்!
முற்றும்.
Comments
Post a Comment