Cyclotron-1
Cyclotron!
அப்போ நாங்க யாணை கவுணியில் குடியிருந்தோம்.
வூட்டு வாசல் திண்ணையிலிருந்து ஏக்கத்துடன் ஜொல்லிண்டிருப்பேன்,
தெருப் பசங்க hire cycle ஒட்டுவதை.
காக்கா முட்டை Pizza கணக்கா!
நேக்கு சைக்கிள் ஒட்டத் தெரியாது.
Hire cycle க்கு காசும் கிடையாது.
அம்மா சைக்கிள் கத்துக்கற்துக்கு பர்மிஷன்லாம் குடுக்க மாட்டாங்கற்து உ.கை.நெ போல தெரிந்தது.
மளிகை சாமான்,காய்கறி வாங்கிண்டு வரும் போது,மீதி சில்லறையை துல்லியமாக அம்மா natural intelligence லாயே கணித்து விடுவாள்.
15 item list ல இருந்தாலும்,
மணக்கணக்கா போட்டு மீதி 2 பைசா ( Not Rupees) எங்கடான்னு கொஸ்சின் வரும்.
அம்மா அந்த காலத்து ESLC.
கணக்கில புலி.
கணக்குல மட்டுமா?
எங்க எல்லாருக்கும் கணக்கு வாத்யார்.
Amma very strict ஆபிஸர் u know.
கஜானாவில் மீதி பணத்தை கட்டுவதை தவிர வேற வழியே இல்லை.
சில சமயம் 1 to 3 paise வரை சலுகை கிடைக்கும் as delivery charges.
அதை அப்படியே சேர்த்து வைக்க ஆரம்பித்தேன்.
கணிசமான ஒரு பெரிய தொகையும்!! சேர்ந்தது.
அதோ அந்த Progress Union school க்கு எதிரே இருக்குமே ,அண்ணா பிள்ளை தெருவில் அந்த Hire Cycle கடைக்கு போனேன் நண்பனுடன்.
Owner பெரிய கிருதா சுருட்டை முடி. Handle Bar மீசை!
ஒல்லியான தேகம்.எப்போதும் கடு கடு முகம் தான். அந்த முகம் இன்னும் நன்னா ஞாபகம் கீது.
Hire Cycle கடைக்குப் போனா சட்டுன்னுலாம் வாடகைக்கு மிதிவண்டி குடுக்க மாட்டா.
நீ எங்கேர்ந்து வர?
உன்னிய இந்த ஏரியால பார்த்ததே இல்லையே?
(ஏரியா வுட்டு ஏரியாவில சைக்கிளை குடுக்க மாட்டா.)
சைக்கிள் ஒட்ட தெரியுமா?
ம்ம் ..தெரியும்னு தைகிரியத்தை வரவழைச்சிண்டு சொன்னேன்.
கொஞ்சம் ஏற இறங்கி பார்த்துட்டு ,அவநம்பிக்கையுடன் 5 paise வாங்கிண்டு note book ல பேர்,time entry போட்டுட்டு, கடை owner 'சிறுவர்கள்" சைக்கிளை எடுத்துக்க சொன்னார்.
ஆஹா! இன்னிக்கு ஜாலியா சைக்கிள் கத்துக்கலாம்னு Mind Milk குடித்தேன்.
குஷியுடன் இருக்கற்திலேயே பள பளான்னு புதுசா இருக்கிற வண்டி மேல் கை வைத்தேன்.
டேய்..டேய் அதை எடுக்காதே!
பக்கத்துல இருக்கிற வண்டியை எடுடா!
நம்மிள்கீ சைக்கிளை Stand லேர்ந்து எடுக்க முடில..too much வெயிட்டு ..லாவகமா எடுக்க துப்பு இல்லே.அப்படியே மேலேயே சாஞ்சிடுச்சு.
அவ்வை சண்முகியில சைக்கிள்sலாம் மட மடன்னு சரியுமே ,அந்த மாதிரி ஒரு சம்பவம் நிகழந்தேறியது.
விரோதமான பார்வையுடன் ஓடி வந்தார்.
மிதிவண்டி கிடைக்காதுன்னு உறுதி ஆயிற்று.
ஒரு மிதி மிதிக்க போரார்னு நிணைத்தேன்!
டேய்! சைக்கிள் ஒட்ட தெரியும்னு சொன்னே?
போடா! வந்துட்டான் காலங்கார்த்தால..
என்னோட 5 paise கையில் மிக அழுத்தமாக திணிக்கப்பட்டது.
Came back home like a defeated
soldier.
பிந்நாளில் சைக்கிள் தயாரிக்கும் கம்பேனியில் மானேஜராக பணியில் சேர்வேன் என்று நிணைத்துக் கூடப் பார்க்கவில்லை!
தொடரும்...
Comments
Post a Comment