Cyberia Sundari

 அஆஇஈஉஊஎ ஏஐ!

ஆடிப் பூர அக்காரவடிசலை திருப்தியாக சாப்பிட்டு விட்டு மெதுவாக ஈஸிச்சேரில் வந்து அமர்ந்தார் நாணு என்கிற நாராயணயங்கார்.
டேய் ஸ்ரீரங்கா! அந்த வெத்தில செல்லத்த சித்த எடுத்துண்டு வரயா இங்கே!
இதோ வந்துட்டேன் தாத்தா!
Wait a Minute for 5 Minutes என்றான் பேரன்.
தாத்தா வாய்விட்டு சிரித்தார்.
வெத்தில செல்லத்துடன்,முன் யோசணயாக தீர்த்த சொம்பையும் கொண்டு வைத்தான் பேரன்.
ஆமாம்!
என்ன ஒரே பிஸியா பர பரன்னு இருக்கே ,கார்த்தாலேருந்து.
அதுவா தாத்தா.. என்னோட Professor ஒரு இம்பார்டண்ட் task குடுத்திருக்கார்.
மத்யான்னம் ஒரு மணிக்குள்ள முடிச்சேயாகனும்.
நான் காலேஜுக்கு கிளம்பரேன் தாத்தா.
மகராஜனா போய்ட்டு வாடா.
உன்னோட புரபொசர் தோத்தாத்ரி ஐய்யாங்காரை நான் விஜாரித்ததா சொல்லு.
என்னோட ஸ்டூடண்ட்தான் அவன்.
சரி ரங்கா! இன்னும் கொஞ்சம் அக்காரவடிசலை சாப்பிட்டு போ.
திவ்யமா பண்ணியிருக்கா சித்ராபாட்டி.
இதைல்லாம் காதில் வாங்கிக்காம ஸ்ரீரங்கன் வெகு ஜல்தியாக புறப்பட்டு போயே விட்டான்.
புத்திசாலி பய..தாத்தா மனதுக்குள் சொல்லிக்கொண்டார் ஒரு முறை பெருமிதமாக.
காலை 9 மணி.
அந்த மஹா சபாவின் டிக்கட் கவுண்டரில் கூட்டம் அலை மோதியது, சாயங்கால கச்சேரிக்கு டிக்கட் வாங்க.
Q மெளபரீஸ் சாலை வரைக்கும் வந்து விட்டது
போலீஸ் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்று தோற்றது.
ஒரே தள்ளு முள்ளு.
ஒரு கர்நாடக இசை பாடகியின் கச்சேரிக்கு இவ்ளோவ் கூட்டமா என்று மக்கள் இதை பார்த்து வியந்தனர்.
சற்று நேரம் டிராபிக் ஸ்தம்பித்தது.
ஒரு மாமி 'இந்த கூட்டத்தை பார்த்தா இன்னிக்கி கச்சேரிக்கு எனக்கு டிக்கட் கிடைக்கும்ன தோனல!'
கூட வந்த மாமி 'நேக்கும் அதான் தோன்றது. வா ஆத்துக்கு போயிடலாம்,மழை வரதுக்குள்ளே.'
விஷயம் இதுதான்.
ஒரு வாரமா ஒரு விதூஷி Social Media ல பாடி கலக்கிண்டு இருக்கா.
ரசிகர்களுடைய அமோக வரவேற்புடன்.
பாடாந்தரம்லாம் பிரமாதமா இருக்கு.
அனாயசமாக மேல் ஸ்தாயில ஸஞ்சாரிச்சு, வாண வேடிக்கைலாம் காட்டறா.
Human Voice or Instrument? ன்ற கேள்வி எழுந்தது.
ராகத்தை அப்படியே தேர்ந்த சிற்பி மாதிரி செதுக்கறா.
கல்பணாஸ்வரங்கள்லாம் diamond setting மாதிரி இருக்கு.
விவாதி ராகத்தைலாம் கூட ஐனரஞ்சகமாக பாடி ரசிகர்களை மயக்கறா.
அதெல்லாம் சரி..
திடீர்னு இந்த பாடகி எங்கேர்ந்து வந்தா. இவ்வளவு நாளா காணல?
ஊரெல்லாம் இதே பேச்சுதான்.
யார் அந்த பாடகி?
அந்த பாடகியின் பெயர்
சைபீரிய சுந்தரி யாம்.
Cyberia Sundari
அப்படின்னா ..
என்ன இவ சைபீரியாலேர்ந்து Siberia வரளா?
ஆமாம்.
ரஷ்யாவில் இருக்கிற சைபீரியாவேதான்னு ஒருத்தர் அடிச்சி சொன்னார்.
மாலை 5.30 மணி
மஹா சபா அல்லோகலபட்டது.
மதராஸ் ஜில்லாவின் Who Is Who லாம் வந்துட்டா கச்சேரியை கேட்க.
Russian Ambassador தன்னுடைய பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார்.
ஆயதம் ஏந்திய போலீஸ் பந்தோபஸ்து சற்றே தூக்கலாக இருந்தது.
சபா காரியதரிசி தன் சகாக்களுடன் பாடகியை வரவேற்க வாசலில் பூச்செண்டுடன் காத்திருந்தார்.
வெள்ளைக்கலர் Mercedes Benz Maybach காரிலிருந்து இறங்கின அந்த பேரழகியான பாடகி,பூச்செண்டை புன்முறுவலுடன் வாங்கி கொண்டு நேரே மேடையை நோக்கி சென்றாள். பிடில்,மிருதங்கம்,கடம்,கஞ்சிரா,மோர்சிங் வாசிக்கறவா எல்லாருமே டாப் கிளாஸ் வித்வான்கள்.
6.00 pm.
திரை விலகியது.
முதல் தடவையாக சைபீரிய சுந்தரி யை பார்த்தவுடன் கூட்டம் கைதட்டி வரவேற்றது.
இது வரை ஆகாஷ்வாணி(Soundcloud) வழியாகதான் கேட்டது.
இப்போதான் நேரில் பார்க்கிறார்கள்.
Professor Dr.தோதாத்ரி ஐயங்கார் கடைசி ரோவில் தன் மாணவன் ஸ்ரீரங்கனுடன் வந்து அமர்ந்தார்.
Head of the Department Artificial Intelligence- IIT Madras.
அவர் ஒரு சங்கீத ப்ரேமி.
நன்றாக பாடுவார். மாணவன் ஸ்ரீரங்கனுக்கும் சங்கீதம் அத்துப்படி.
MS Blue கலர் வைர ஊசி புடவை கண்ணைப் பறித்தது.தலை நிறைய மல்லிப்பூ.நெற்றியில் பெரிய குங்கும பொட்டுக்கு கீழேயும் சின்னதாக ஒரு பொட்டு.
எட்டுக்கல் வைரத் தோடு மற்றும் மூக்குத்தி பிரகாசமாக ஜொலிக்கற்து.
காதில் மாட்டல் வேற.
கழுத்தில் தங்கத்தால் இழைத்த மாங்கா மாலை.
ரண்டை கைகளிலும் தங்க மற்றும் கலர் கலராக கண்ணாடி வளையல்கள்.
நெற்றிச்சுட்டி மற்றும் ராக்குடி.
கைகளில் நெளி மோதிரம்.
பளிச் மருதாணியும் கூட.
சைபீரிய சுந்தரி மேடையில் வீற்றியிருந்தது அவ்வளவு செளந்தர்யமாக இருந்தது.
மாமிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்
இந்த பாடகி, அந்தக்கால பிரபல பாடகியை நிணைவுப்படுத்துவதாக!
எல்லோருக்கும் நமஸ்காரம்!
இன்றைய கச்சேரியை சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் ஸ்ரீ ராக கீர்த்தணமான எந்தரோ மஹானுபாவுலுடன் ஆரம்பிக்கிறேன் என்று பாடகி அறிவித்தாள்.
அதற்கப்புறம் ஒவ்வொரு உருப்படி ஆரம்பிக்கும், முன் அதை பற்றின சிறு குறிப்பை தந்து விட்டுதான் பாட்டை ஆரம்பித்தாள்.
எல்லாருக்கும் ஒரே ஆச்ரயம்!
ரஷ்யாவில் இருந்துக் கொண்டு ஒரு சில அபூர்வ தகவல்களை கூட இவ்வளவு துல்லியமாக கூறுகிறாள்!
அதுவும் மிக அழகான தழிழ் உச்சரிப்புடன்!!
பாட்டின் இடையில் வெள்ளி கூஜாவிலிருந்து கும்மோணம் டிகிரி காப்பியை பருகினாள்.
மெயின் ராகம் பைரவி..
விஸ்தாரமான ஆலாபணை.
ஆஹா பேஷ் பேஷ் ஆசெம் என்று பாராட்டுகள் வந்த வண்ணம் இருந்தன ரசிகர்களிடமிருந்து..
இந்த மாதிரியான விசேஷ பிரயோகங்களை இதுவரை கேட்டதேயில்லை என்று பேசிக்கொண்டார்கள்.
கூட்டத்தின் கரகோஷம் விண்ணை பிளந்தது!
Professor தோத்தாத்ரியும் கூட சுவாரஸ்யமாக தான் கேட்டுக் கொண்டிருந்தார்,
ஒரு இடத்தில் முகாரியின் சாயல் எட்டி பார்க்கும் வரை!!!
அவர் இப்போ அதிகமாக அதிருப்தி அடைந்து கோபமாக ,ஸ்ரீரங்கணை பார்த்து கண்ணை உருட்டி
"AI Code ஐ நன்னா டெஸ்ட் பண்ணிட்டேன்னு சொன்னியே மத்யான்னம் கூட!
இதுதான் test பண்ணின லக்ஷணமா?" என்று மந்திரஸ்தாயில் கர்ஜித்தார்.
ஸ்ரீரங்கனுக்கு அந்த டிஸம்பர் மாத குளிரிலும் வேர்த்துக் கொட்டியது.
'Extremely Sorry Proffessor.
Tonight I will Fix this Bug & Release the Next version for Tomorrow's Kutcheri at Delhi.' said the research assistant Srirangan.
You better do it!
Also review the code once again for Cyber Security.
எவனாவது Hack பண்ணி தொலைக்கப் போறான்!
இதை சொன்னதுதான் தாமதம்.
தர்பாரிலும் நாயகி கொஞ்சம் எட்டி பார்த்தாள்!
கடோசி உருப்படியான சிந்து பைரவி தில்லானா முடிந்தவுடன் ,கூட்டத்தோடு கூட்டமாக வெளியேறினார்கள் Prof தோத்தாத்ரியும், ஸ்ரீரங்கனும்.
கச்சேரி முடிந்தவுடன் நிருபர்களுடைய கேள்விகளுக்கு சரளமாக தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி,ஆங்கிலத்தில் அதே accent ல் பதில் அளித்து ரசிகர்களை ஆச்சிரியப்படுத்தினார் அந்த பாடகி.
கூட்டம் கலைந்தவுடன் Russian Ambassador உடன் ரஷ்ய மொழியிலும் சம்பாஷணை.
Welcome to Year 2040.
The Power of Artificial Intelligence in Fine Arts!

Comments

Popular posts from this blog

Quality of Music!