ராக ஆலாபணை


 பாமர ரசிகனாக ராக ஆலாபணை பற்றிய அடியேனுடைய ஒரு சிறு நீண்ட வ்யாசம்.

Opening is very important for playing Chess as well as for raga alapanai.
ஆலாபணை யை மூன்று பகுதிகளாக பிரித்து கொண்டு பாடனும்.
1.அம்மாக்கள் குட்டி பாப்பாக்குதக்ளுன்டு ஸுபூன் அளவு ,பாலை பாலாடை வழியாக குடுப்பாளே,அந்த மாதிரி சிறு சிறு சங்கதிகளாக ஆரம்பிக்க வேண்டும்.
அம்மா ,குழந்தை தான் கொடுத்த பாலை முழுங்கி விட்டதா ? என்று பார்த்து விட்டுதான் ,அடுத்த இஸ்பூன் பாலை புகட்டுவா.( இல்லாக்காட்டி புறைக்கேறிடும்)
அதே மாதிரி பாடகர் பிடில் வித்வானிமடமிருந்து தான் போட்ட சங்கதி return வருகுதான்னு பார்த்து விட்டு,அடுத்து சிறு சிறு சங்கதிகளாக டெவலப் செஞ்சுண்டே போகனும்.
Small is always Beautiful u know!
எடுத்த வுடனே unambiguous ஆ இன்ன ராகம்னு பளிச்சினு தெரியறா மாதிரி பாடனும்.
வயலின் ஆர்ட்டிஸ்ட் பாவம் இல்லையா!
ஆடியன்ஸ் கூடத்தான்.
எல்லாரையும் போட்டுக் குழப்ப கூடாது.
2.இப்போ குழந்தை வளர்ந்து விட்டது.நிலாவை காட்டி கமகம நெய்யுடன் கூடிய பருப்பு மம்மு குடுக்கற மாதிரி சங்கதிகளை விருத்தி பன்ற தருணம்.
விமானி ஒடுபாதையில் விமானத்தை மெதுவாக செலுத்துவாரே,take offக்கு முன்னாடி அதே மாதிரி medium length சங்கதிகளை லாவகமாக , கமகக் குழைவுடன் வழங்க வேண்டும்.
பாயசத்தில் வருமே முந்திரி+ பாதாமஸ் அந்த மாதிரி பிருகாக்களை அப்ப அப்போ மிதக்க விடனும்
Plain பாயசம் yummy யா இருக்காது.
ஆனா ஒவர் ப்ருகாக்கள் உடம்புக்கு ஆகாது.!!
பிடில் வித்வான் எதிர் சம்பாவணை குடுப்பதற்கு chance குடுக்கனும்.
கச்சேரி என்பது team work தானே!
ராகத்தோட ஜீவ ஸ்வரங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு,ராக ஸ்வரூபத்தை ,nuances ஐ ,வல்லின மெல்லின பிரயோகத்துடன் பாட வேண்டும்.
வெறும் plain notes நன்னாவா இருக்கும்? embellishments இருந்தாதான் colourful ஆ இருக்கும்.
கொஞ்சமா humming,கள்ளக்குரல், fade out பண்ணா அது ஒரு தினுஸா தித்திப்பா இருக்கும்.
3.இப்போ ATC கிட்டேர்ந்து permission கிடைச்சாச்சு take-off க்கு.
இப்பதான் long கார்வைக்கு உகந்த நேரம்.
but it should be a smooth take- off.
After steadying the plane initially,pilot மாமா 20 k to 40 k ft க்கு climb பன்னுகிற மாதிரி ,full throat ஆ (like full throttle) வேகத்தை கூட்டி பாடனும்.
நடவுல air turbulance வந்தா pilot மாமா சாமர்த்தியமா சமாளிச்சுfying பன்னுவாரே அந்த மாதிரி உச்சத்தை தொடனும்.
முடியலனா,back off !!!
repetion சங்கதி இல்லாம பாட முடியாதுதான்.minimum is always desirable.
Long கார்வை long ஆ இருக்கனும்.
loooonggg ஆ goods வண்டி மாதிரி,தம் பிடித்து பாடினா நன்னாவே இருக்காது.
அன்னி தேதிக்கு அமையற குரலோட பலம் & பலவீனத்தை அறிந்துதான் பாடனும்.
திருப்பி திருப்பி try பன்றேன்னு, எம் ஆர் ராதா மாதிரி double குரல்ல பாடப்டாது.
கெளரவமா gracefull ஆ,மலையிலிருந்து கீழே இறங்கிடனும்.
ஆனாக்க இந்த வல்லின மெல்லின ப்ரோயகங்களை 3 பகுதிகளிலும் காட்ட வேணும்.
அது எப்டி இருக்கும்னா அளவோடு சேர்த்த பச்சை கற்பூரம்+ ஏலக்கா+கச கசா பால் பாயசத்துக்கு நிகர்.
ஊதுவத்தி புகை சுருள் சுருளா மணம் கமழ எழும்புமே ,அதே மாதிரி சுருள் சுருளான குட்டி குட்டி சங்கதிகள் பேஷ் சபாஷ் ஆஹா wow type பாராட்டுகளை வரவழைக்கும்.
சிலசமயம் அந்நிய ஸ்வரங்கள் அழகு சேர்க்கும்.
மின்னல் வெட்டின மாதிரி பிருகாக்கள் அவசியம் இங்கே.
Scope இருந்தா ஜிலு ஜிலுன்னு hindustani type சங்கதிகளையும் ஒரு பிடி பிடிக்கலாம்.ஒரேடியா இறங்க ப்டாது.
Graha bedam பாடினால் கைத்தட்டல் நிச்சியமாக உண்டு.ஆனால் அதோட அளவு எப்பிடின்னா, ஒரு rainbow வரச்சே பிரமிப்புடன் பார்த்து ,வியந்து மனஸும் தேஹமும் லேசாவதை போல் உணர்ந்த தருணத்தில் ,சடாரென்று கண் சிமிட்டலுடன் tata see you later ன்னு வானவில் ,வானில் மறையுமே ,அந்த அளவுதான் அளவுகோல்.
ரொம்ப பண்ணினா ராக மாலிகையான்னு கேட்டுடுவா!😁
அடுத்தது descending.
expert pilot இறக்கறா மாதிரி இறக்கனும் ஆலாபணையை.. must be a very smooth landing.
நடுவில் கதம்ப கச்சேரியா slow,medium ,fast pace mix செய்து ,hubrid version கொஞ்சம் பாடலாம்.
குட்டி பாப்பாவை வாத்ஸலயத்துடன் தூளியில் படுக்க வைப்போமே, அதே மாதிரி medium & small சங்கதிகளுக்கு படிப்படியாக வந்து முடிக்க வேண்டும்.
அப்பதான் ஆடியன்ஸ் ஒரு வித trance state ல இருப்பா.
எப்போ ஆலாபணையை முடிப்பது என்பது முக்கியம்.
ரொம்ப நீட்டி முழக்கினா repetition தான்.
audience mobile phone பக்கம் போகாம பார்த்துக்கற்து தான் அளவுகோல்.
ஆலாபாணை நடுவில் எந்த கீர்த்தணை வரும் என்று கோடி காட்டலாம்.
இல்லேன்னாலும் தோஷம் இல்லை.
Popular கீர்த்தணையிலிருந்து inspire ஆகி அபாரமான சங்கதிகளை present பண்ணலாமே.
அப்ப அப்போ கண் மூடி பாடலாம்.மொத்தமா மூடிண்டு பாடினால் co artists + audience eye contacts & their reactions கிடைக்காது.
அது ரெம்ப அவசியம் for course correction.
இந்த மாதிரிலாம் பாடினாதான் நேக்கு பிடிக்கும்.ஹி ஹி .😁😁

Comments

Popular posts from this blog

Quality of Music!