சிகை அலங்காரம்!
சிகை அலங்காரம்!
அப்போ நாங்கள் செளகார்பேட்,யாணை கவணி யில் No 11,சந்திரப்ப முதலி தெருவில் குடியிருந்தோம் என்ற மிக முக்கிய சரித்திர குறிப்பு ,முந்தைய சில வ்யாசத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது.
See the Photo of that house.
சின்ன வயசில Hair Cutting லாம் சட்டுன்னு முடிவெடுத்து செஞ்சுக்க முடியாது.
அம்மாக்கிட்ட அப்ளிகேஷன் போடனும்.
என்ன இப்ப அவசரம்?
இன்னும் ஒரு மாசம் போகட்டும்.
பார்க்கலாம்னு அம்மா சொல்லிடுவா.
இல்லம்மா..இப்ப செஞ்சுண்டேயாகனும். காசு குடும்மான்னு கேட்டாக்க,
ஆமாம்.
அப்பவே சொன்னேன் !
நல்ல ஒட்டக்க Summer Crop பண்ணின்டு வான்னு சொன்னா, நீ போய் சும்மா தலைவாரிண்டு வர மாதிரி கொஞ்சூண்டு வெட்டிண்டு வர.
அதனால முடி உடனே காடு மாதிரி வளர்ந்துடற்து ன்னு சொல்லி,event ஐ reschedule பண்ணிடுவா.
எப்பவும் நாங்க அந்த சேகர் சலூனுக்குத் தான் செல்லனும்.
(வேற கடைக்குல்லாம் போகப்டாது.)
அந்த சலூன் தெருக்கோடில இருக்கிற பிரகாஷ்பவனுக்கு பக்கத்தில் இருக்கிற ,S L Rao டெய்லர் கடைக்கு பக்கத்துக் கடை.
இப்ப சலூனும், டெய்லர் கடையும், பிரகாஷ் பவனும் இல்லை.
அடுக்கு மாடி கட்டிடம் வந்தாச்சு.
See the Photo.
நாங்கல்லாம் ஹேர் கட் செஞ்சிண்டு நேரே ஆத்துக்குள்ள வர முடியாது.
வாசல்ல ரேழியில நின்னுண்டு ,முன் கட்டுல இருக்கிற யாரையாவது கூப்பிட்டு வந்துட்டேன்னு சொல்லு!
ன்னு, message குடுக்கனும் ,பின் கட்டில் இருக்கிற அம்மா/ பாட்டிக்கு.
அதுக்கப்பறம்தான் ஏற்பாடே!
வெந்நீரோடு அம்மாவோ,பாட்டியோ வந்து ,வாசல் ரேழியிலேயே Rough ஆ குளிப்பாட்டி விடுவா.
பிறகு எங்க போர்ஷனுக்கு போய் Fair ஆ பாத்ரூம்புல ,முறைப்படி குளிச்சி Fair & Lovely யா வெளியே வருவேன்!
சில சமயம் ,கைவேலையா இருந்தா வெந்நீர் வர லேட்டாகும்.
சம்மரா இருந்தாலும் எங்காத்தில வெந்நீர்தான் பசங்களுக்கு.
பச்ச தண்ணில குளிச்சா ஜூரம் வந்திடுமாம்!
வெந்நீர் வர வரைக்கும் முன் கட்டு பாலாஜியோட அரட்டை!
என் பாட்டி அதை பார்த்தால்
டேய் பாலாஜி!
அவன் இன்னும் குளிக்கவே இல்ல சலூனுக்கு போய்ட்டு வந்து. அதுக்குள்ளேயும் அவன் கூட என்ன ஈஷல் வேண்டியிருக்கு.
தள்ளிப் போய் நில்லுடா.
உங்கம்மாவை கூப்பிடட்டா இப்போ?
அவன் உடனே ஒடியே போய்ட்டு,அவாத்து ஜன்னல் வழியா விட்ட சம்பாஷணையை தொடர்வான்.
Hair cut பண்ணிண்டு வந்தவுடனே, முன் கட்டு பசங்களோட கேலியும் கிண்டலையும் தாண்டிதான் பின்கட்டுக்கு செல்ல முடியும்.
பாலாஜக்கு நான்கு சகோதரிகள்!!
Such a close Haircut triggers atrocious comments.
அல்மோஸ்ட் மொட்டைதான்.
பள்ளிக்கூடத்திலேயும் பசங்க ரண்டு நாளுக்கு ஒட்டு ஒட்டுன்னு ஓட்டுவார்கள்.
சலூன் Owner சேகர் பார்ப்பதற்கு ரப் & டப் டைப். பட் நைஸ் மேன்.
நான்கு படி ஏறிதான் சலூன் உள்ளே போகனும்.
படிகளின் இரண்டு பக்கமும் பூந்தொட்டிகள் இருக்கும்.
மொத்தம் மூன்று Revolving Chairs சுவற்றில் பதித்த பெரிய Size கண்ணாடிகள்.
பெரிய அரசியல் தலைவர்கள் படங்கள்.
எப்பவும் அலறும் ரேடியோ.
வாஷ்பேஸின் அருகே கத்தியை தீட்டுவதற்கு ஒரு பெல்ட் தொங்கிண்டு இருக்கும்.
Wait List க்கு நீள bench.
அதில் மடிக்கப்படாத ரண்டு நாள் தினத்தந்தி ராணி மற்றும் கல்கண்டு தாறுமாறாக இறைந்து கிடைக்கும்.
சிறுவர் கட்டிங் ,
பெரியவர் கட்டிங்
ஷேவிங் + கட்டிங் விலைப்பட்டியல் தொங்கிண்டு இருக்கும்.
வித விதமான Hai Style photo போட்டுக்களை உள்ளடக்கிய ஒரு Framed Poster இருக்கும்.
அதில எதாவது செலக்ட் செய்து சொன்னால் அதே மாதிரி முடி திருத்தப்படும்.
எங்களுக்குலாம் அந்த சுதந்திரம் கிடையாது.
இப்போ அந்த மாதிரி poster லாம் காண முடியவில்லை.
'செவ்வாய் விடுமுறை' அறிவிப்பு பலகையும் கூட.
நாள் நக்ஷத்திரம் பார்த்துதான் சலூனுக்கு அனுப்புவா அந்த நாளில்.
சலூனில் எப்பவும் waiting list தான்.
பெஞ்சுல உக்கார்ந்து பேப்பரை பல தடவை படித்து படித்து மணப்பாடமே ஆகிவிடும்.
அடுத்தது நீதான் கட்டிங் ன்னு சொல்லுவார் ஒனர் சேகர் நம்பளை பார்த்து.
சரின்னு குஷியாகி , சரியா நம்ம turn வரச்சே,ஒரு பெரிய சேட் மாமா வந்துடுவார்.
அவருக்கு VVIP Quota ல சீட் அலாட் ஆகிடும்.
திரும்பி அதே குரங்கு குசால் கார்ட்டூன்,கன்னித்தீவு சிந்து பாத், இரும்புக்கை மாயாவி கார்ட்டூன் கதை, சதக் சதக் என்று குத்திக் கொலை, போலீஸ் வலைவீச்சு செய்தி,
சாந்தி,கிரெளன்,புவனேஸ்வரி தியேட்டர்களில் சிவாஜியின் புதுப்பட ரிலீஸ்
மற்றும் கிரிக்கட் செய்திகள்ன்னு revise பண்ண வேண்டியதுதான்!
ரேடியோவில் இசை அமுதத்தில் தாமதமேன் ஸ்வாமி ன்னு ( situation song) GNB பாட ஆரம்பித்தவுடன், ஒடிப் போய் வேற ஸ்டேஷனை மாத்திப்பிடுவார் சேகர்.
நான் மனஸுக்குள் இரக்கம் வராமல் போன என்ன காரணம் ?னு பாடிக் கொள்வேன்.
ஆகாஷ்வாணி!
செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி வரும்.
ஆச்சா!
ஒருவழியா , 'தம்பி நீ வா' ன்னு கூப்பிட்டவுடன், உடனே தாவி அந்த சூழல் நாற்காலியில் ஏறி அமர்ந்து விடுவேன்.
சுமார் அழுக்கா இருக்கிற சால்வை போற்றப் படும்.
(VIP customer க்குலாம் ,டிராயர்லேர்ந்து வெள்ளை வெளேர்ன்ற சால்வை.)
நமக்கெல்லாம் அந்த Hair Style போட்டோவை காண்பித்து எந்த ஷ்டைல் கட்டிங் லாம் கேட்க மாட்டா.
எப்பவுமே ஒட்டுக்க சம்மர் கட்டிங்தான்.
Standard Instruction given by அம்மா!!
புஸ் புஸ் ன்னு hand pump வழியா தண்ணியை பீச்சி, தலை முழுதும் அடித்து ஊற வைப்பார்.
சரியா கட்டிங் ஆரம்பிக்கச்சே ஒரு சில ஆசாமிகள் வந்து ஸ்வாதீனமா தலையை வாரிண்டு, ஓ ஸி யில் Snow+ Powder அப்பிண்டு ,ஒனரோட கொஞ்ச நாழி அரசியல் பேசிட்டு போவார்கள்.
அந்த கருத்து பரிமாற்றும் முடியும் வரை, எந்த கோணத்தில் தலை சாய்க்கப் பட்டதோ ,அதே கோணத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
தலையிலிருந்து தண்ணீர் வழிந்து மூக்கு நுணியில் வந்து நிக்கும்.
அல்லது ஒரு சில முடிக் கற்றைகள் கழுத்து வழியாக மேல் முதுகில் தஞ்சமடைந்து குத்தி அரிக்கும்.
கர்ணன் மாதிரி பொறுத்துண்டு அதே Position ல Freeze ஆகி இருக்கனும்.
இல்லாவிட்டால் திட்டு விழும்.
நெம்ப கஸ்டம்டா ஸாமி!
Almost முடியும் தருவாயில் ஒரு எமர்ஜன்ஸி ஷேவிங் வந்தால் போச்சு.
நம்பளை விட்டு விட்டு Tatkal கஷ்டமர்க்கு தாவி விடுவார் சேகர்.
திருப்பதி கதை தான்!!
கடைசில பார்டர் கட்டச்சே, கத்தியை நல்லா தீட்டிண்டு ,காதை அழுத்தி,தலையை முரட்டுத்தனமா சாய்ச்சி,கத்திப் போடுவார்.
அப்ப ரண்டு விதமான உணர்ச்சிகள் வரும்.
காதுக்கு பின் கத்தி போடச்சே சிறிது வலிக்கும் + எரியும்.
மெதுவா பண்ணுங்கோன்னு ,மெதுவா சொல்வேன்.
அநேகமா அவர் காதில் அது விழாது!
அப்புறம் பின் கழுத்தில் கத்தியை ஒட்டும் போது குறு குறுன்னு tickle ஆகி சிரிப்பு வரும்.!

இரண்டுத்தையும் அவர் கண்டுக்காமல், மத்த கஷ்டமரோடு அரசியல் அரட்டை பண்ணின்டு இருப்பார்.
ஆச்சா.
ஒருவழியா பட்பாபிஷேகம் முடிந்து இறங்குடா ன்னு சொல்வார்.
கண்ணாடியில் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும்.
எப்படி இருந்த நான்..!.
இப்படி யா?
போச்சு எல்லாம் போச்சு!
என்னோட அழகெல்லாம் போயிந்தே..
இதோட எப்படி முன் கட்டு பசங்க+ ஸ்கூல் நண்பர்களை face பண்றது?
சால்வையை எடுக்கற்துக்கு முன்னாடி, பின் கழுத்தில பிரஷ் வைத்து துடைத்து Remi பகுடர் லாம் ,என்னிய மாதிரி சிறுவர்களுக்கு போட மாட்டார்.
ஆச்சா.
ஒரு முறை தெகிரியத்தை வரவழைத்துக் கொண்டு hair style poster ல ஒரு போட்டோவை காட்டி ,இது மாதிரி கட்டிங்தான் வேணும்னு கண்டிஷனா சொல்லிட்டேன்.
அவர் ஒரு மாதிரியா பார்த்துவிட்டு சால்வையை போர்த்திவிட்டுட்டு ஆலாபணையை ஆரம்பித்து, மங்களத்தில் முடித்தார்.
கண்ணாடியில் பார்த்து அசந்தே போய்ட்டேன்.
இருக்காதே பின்னே!
ஜெமினி கணேசன் சாயல் வந்துடுத்து!
ஜாலியா விசில் அடிச்சுண்டே வந்தேன்.
ஆத்துல நுழைஞ்சு , as usual முன்கட்டு பாலாஜியை கூப்பிட்டேன்.
அவன் வந்து பார்த்துட்டு ,ஏண்டா ஹேர் கட் பண்ணிக்கிலயா? ன்னு கேட்டான்.
எல்லாம் பண்ணியாச்சுடா..நீ போய் எங்கம்மாவை வெந்நீரோட வரச்சொல்லுடா.
அவன் ஏற இறங்க பார்த்து நன்னா ஷ்டைலாதான் இருக்கு..ஆனா இன்னிக்கி இருக்கு உனக்கு கச்சேரின்னு சொல்லிண்டே பின்கட்டுக்கு போனான்.
இதை கேட்டுட்டு அவன் சிஸ்டர்ஸ்லாம் ஒரு தடவை வரிசையா வந்து வாழ்த்திவிட்டு போனார்கள்.
நானும் ஷ்டைலா காலரை தூக்கி விட்டுண்டேன்.
அம்மா வருவதை பார்த்தேன்.
கையில் வெந்நீர் பக்கிட்டியை காணோம்!
பாலாஜி நமுட்டு சிரிப்போடு பின்னாடியே வந்தான்.
ஆஹா! பத்த வைச்சிட்டியே பாலாஜி!
அம்மா: ஏண்டா உனக்கு யார்டா இந்த தைகிரியம் குடுத்தா ?
அப்படியே முடியை வெச்சுண்டு வந்து நிக்கறியே?
போய் திருப்பி 'அழகா' சம்மர் கிராப் பண்ணின்டுதான் உள்ளே வரணும்.
தெரிஞ்சதா?
போடா!
போடான்னா!
இப்ப போறயா இல்லையா?
இல்லைம்மா..
இந்த ஒரு தாட்டி உட்று மா..
அடுத்த வாட்டி..
No அடுத்த வாட்டி..
இல்லைம்மா...சேகர் திட்டுவார்மா.
இரண்டாவது வாட்டிலாம் rework பண்ண மாட்டார்மா.
அப்படியா?
இதோ..நான் வந்து கட் பண்ண சொல்றேன்.
நீ முன்னாடி போடா சலூனுக்கு.
நான் பின்னாடியே வரேன்.
நான் சலூனில் பயந்துண்டே உள்ளே நுழைந்தேன்.
சேகர் என்னன்னு கேட்டார்?
அதுக்குள்ளேயும் அம்மா வெளியிலேர்ந்து,
என்ன சேகர் .இந்த மாதிரிலாம் கட் பண்ணி அனுப்பிச்சிட்டீங்க?
இல்லம்மா..அவன் கேட்டான்.அதான்..
பரவாயில்லம்மா..நீங்க போங்கம்மா வூட்டுக்கு.
நான் ஒட்ட சம்மர் கிராப் பண்ணி அனுப்பறேன்.
இதுக்கல்லாம் ஏம்மா நீங்க கடையண்ட
வரீங்க?
நான் அதுக்குள்ளயும் காலியான சேர்ல போய் சமர்த்தா உக்காந்துட்டேன்.
அவர் கொஞ்சம் விரோதமாக பார்த்தார்.
நாலாம் காலத்துல ,மெஷினை வச்சி ,'வச்சி செஞ்சுட்டார்' !!
மேல் கபாலம் காலி!
சேப்பாக் மைதானம் மாதிரி இருந்தது.
ஆத்துல நுழைஞ்ச உடனே ,மிக பிரமாதமான வரவேற்பு by பாலாஜி & Co.
ரெம்ப ஷேம் ஷேம் ஆயிடுச்சி.
An Aborted Attempt for ஷ்டைலிஷ் hair cut!

In those Days,default 'Summer Crop' was
'Value For Money'
'Super Saver'
for Economic Reasons in the lower middle class family.
அம்மாவிடமிருந்து கற்றப்பாடம் Value For Money.
இன்றைய தேதி வரை கடைப்பிடித்து வருகிறேன்!
Comments
Post a Comment