சங்கீதகிறுக்கல்ஸ்-முதல் பாகம்



ஞான் ஒரு incorrigible சங்கீத பைத்தியம்.

அரை குறை ஞானத்தை வைச்சிண்டு ஏதோ 'சங்கீதகிறுக்கல்ஸ்' ன்னு ரண்டு season ல எழுதினேன்.
பைத்தியம்னாலே கிறுக்கிதானே ஆகனும்.
நிற்க!
நூற்றுக்கணக்கான சக ரசிகர்கள் நான் கிறுக்கினதை ஒரு தொகுப்பா ஏன் போடக் கூடாதுன் னு என்னை கேட்டுண்டா!
அப்படியா? நெசமாவா ? ன்னு நீங்க கேட்கற்து நேக்கு காதில விழற்து.
ஆனா அப்படில்லாம் என்னிய ஒருத்தரும் வந்து கேக்கல!
சும்மா தோணித்து.
அதான் இந்த நோட்😁 முதல் பாகம்!!
இதெல்லாம் கச்சேரியின் நடுவில் பதிவு செய்தது.
-----------------------------------------------------------------------------
சங்கீதகிறுக்கல்ஸ்-முதல் பாகம் 



கானாமுதபானம்!!! 

Hall ல்ல இடம் லேது! மேடையில் இடம் இல்லே!தரையிலும்,படிக்கட்டிலும் ரசிகர்களுடைய ஆக்ரமிப்பு.Sound Engineer Room ல கூட கூட்டம்! உத்திரம் மாத்திரம் தான் காலி.தேர்க்கூட்டம்,திருவிழாக்கூட்டம்.

இதெல்லாம் எங்கேன்னு கேக்கறேளா? The quintessential boy next door type

Sri Ramakrishnamurthy கச்சேரியில் தான் அவ்ளவ் கூட்டம்,நேத்திக்கி, ராகசுதாஹாலில்.எவ்ளோவ் கச்சேரி attend பன்னியிருக்கேன் இந்த அரங்கத்தில்.இம்மாங்கூட்டம் ,இத்தினி ஜனம் இப்பதான் மொத தபாவா பார்க்கிறேன்.இத்தினிக்கும்,நேத்தி Working Day Only.


இப்பதான் திகட்ட திகட்ட இசை விழா முடிந்திருக்கிறது.கணிசமானஅளவுக்கு, Youngsters ( என்னிய மாதிரி😀) கோஷ்டியும் வந்திருந்தா.சங்கீத கலாநிதி, திருச்சி சங்கரன் மாமாமிருதங்கம் வாசிச்சது ,யாணை பலம் ராம்கிக்கு.சிம்மம் மாதிரி வாசிச்சார்.Main Suite is கம்பீரமான காம்போதி.

வெகு நேர்த்தியான ஆலாபணை.முடிக்கும் தறுவாயில்,ரசிகர்களின் கரகோஷம்! அது அடங்கினவுடன்,with his shy,childish smile ,Ramki told "நான் இன்னும் முடிக்கலே"(ஆலாபணையை).அதுக்கும் கைதட்டல்+சிரிப்பு from ரஸிகாஸ். ஆலாபணை முற்றுப் பெற்றவுடன்,double மடங்கு மீண்டும் கரகோஷம். ராம்கியிடமிருந்து, இப்போ,ஒரு மோகனமான புன்னகை.

சாருமதி ரகுராமனின் வயலின் வாசிப்பு A class ,with full of honey coated சங்கதிஸ்.சபாஷ்! சரியான போட்டி.கீர்த்தணைக்கு எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கு சங்கரன் மாமா ஒரு எடுத்துக் காட்டு.his anticipation is something amazing. As usual Chandrasekara Sharma gave an excellent support.


மங்களம் பாடும் பொழுது, எழுந்து போக ப்டாது என்பதை ,நம்ம புன்னகை மன்னன், ராம்கி நாசூக்காக சுட்டி காட்டியவுடன்,ரசிகர்கள் கப்சீப் பென்று அமர்ந்தனர். (அந்த 2 நிமிடம் கூட பொறுமை இல்லையா மக்களே?)


கச்சேரி முடிந்தவுடன் ,நண்பர் Music Professor Eero Hameenniemi from Finland, இந்த கச்சேரியைப் பற்றி ,மிகவும் சிலாகித்து பேசிக்கொண்டே வந்தார். வழிநெடுக..அவரோட ஜாகையில் கொண்டு விடும்போது.


Great Team Work.Memorable Concert. Divine Music from Irvine. பலே! பலே! Junior KVN!


**************************************************************************************


I have attended 100 plus concerts in this Margazhi Music Season.So it would be difficult for any normal person to rate the bestest concert.But I did not have any difficulty at all to select the Two Bestest Concerts & Two Bestest Artist from my list.

First Bestest Concert on 25th Dec2019 at iconic Satyam Cinema.Sarasawathi Veena Concert by Vidushi Jayanthi Kumaresh. 

Second Bestest Concert on 30th Dec2019 at Madras Music Academy. 

Again Sarasawathi Veena Concert by Vidushi Jayanthi Kumaresh.


***************************************************************************************


much too much three much much much பவானி ஜமக்காளத்தையும் பத்தமடைப் பாயையும் Season's கடோசி கச்சேரில சுருட்டி வைக்கிற வரைக்கும் ஒரே சுருட்டிதான். 

I mean சுருட்டி ராகம் ஒன்ன்னுதான்.வெவ்வேறு தினுஸா பாடினா,வாசிச்சா.ஹரிகாம்போஜி ஜன்யமான சுருட்டிமிக அழகான ராகம்.

வெத்தில செல்லத்துடன்,ஆத்து திண்ணையிலே,or கிணற்றடியில்அந்த வேப்ப மர நிழலில்நேஷனல் panasonic tape recorder ல,லால்குடி மாமாவோட சுருட்டியை கேட்டு அனுபவித்தது க்ஞாபகம் வந்தது. அதான் பதிவிட்டேன்.


***************************************************************************************


இசை தன்னை புதுப்பித்துக் கொள்கிறது! Another Galaxy Created by the Creater!! Circa 1978 Mandolin Uppalapu Srinivas கச்சேரியை முதன் முறையாக ஜார்ஜ் டவுன்,மதறாஸ்- 60001,நாராயண முதலி தெரு கல்யாண சத்திரத்தில், தியாகராஜ உத்ஸவம் அகண்ட கச்சேரியில்கேட்டு மகிழ்ந்து ஸ்தம்பித்தது நிணைவு வருகிறது. இப்போது Child prodigy Rahul Vellal


***************************************************************************************


There are two types of music.

Praying to God through music.

Another type is God Playing music for us.  Jayanthi Kumaresh Veena is 2nd type. Period.


***************************************************************************************


இவர் kulur ஆ? கும்கியூரா? கும்கியால் நம்மை மயக்குகிறார்.


Wow! I bow down to Kulur JayachandraRao


***************************************************************************************


பட்டு மாதிரி வழுக்கின்டு போற்து சக்ரவாஹம்.இந்த மாதிரியான சக்ரவாஹம் கேட்டா நேக்கு sugar எகிறும்.எகிறட்டும்!இந்த நிமிஷமே ப்ராணன் போய்டாதான்னு இருக்கு.அப்பேர்பட்ட ராகப்ரவாகம்!சரஸ்வதி தேவியேதான்!


Dr. Jayanthi Kumaresh - Veena at Madras Music Academy.


எத்தணை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! இறைவா!

வசந்தகாலம் வந்தது அரங்கினுள் வசந்தா ராகம் மூலமாக!

அவள் temple jwellery யால் ராக ஆலாபணை ஆரம்பித்தில் அலங்கரிக்கப்பட்டாள்.

அடுத்தடுத்து வைர அட்டிகை,வைர ஒட்டியாணம்,எட்டுக்கல் வைர மூக்குத்தி,நெத்திச் சூட்டி,ராக்கொடி,நவரத்தினமோதிரங்கள்,நெளி மோதிரம்,தங்க மற்றும் வைர வளையல்கள்,வைர ஜிமிக்கிகள் ,மற்றும் மாட்டல்கள் சகிதம் அலங்கரிக்கப் பட்டாள்..ராக ஆலாபணை,க்ருதி rendition, ஸ்வரப்ரஸ்தாரங்கள் மூலமாக!!

ராக தேவதையை பார்ப்பதற்கு காண கண் கோடி வேணும்!!!கொள்ளை அழகு! Big Sabash !! Jayanthi Kumaresh


***************************************************************************************


மொத கச்சேரில சுத்தமுகாரி. இந்த கச்சேரில சுத்தமான முகாரி! சபாஷ்!


***************************************************************************************


Wow! Wat a RTP Today! I bow down to Queen of RTP !!Gayatri Kamakoti


***************************************************************************************


Supply Chain Status!

5 star artists கச்சேரிக்கு அநேகமா இது நடக்கிறது.Rest room ல hand sanitizer ஒரே ஒரு bottle தான் வைக்கப்படும்.5 sink இருக்கு.செம்ம கூட்டத்தில் நாம அந்த hand sanitizer நோக்கிப் போனா,அதை basket ball pass பன்றா மாதிரி,அந்த மஹானுபாவுலு 3 sink தள்ளி ,தள்ளிப் புடுவார்.நாம விடாக்கொண்டனா,பலீங் சடு குடுன்னுby pass ல, left ல over take பன்னி அதை எடுக்கப் போனா ,அந்த மாமா துர்வாசர் look ஐ விடுவார்.பேசாம நின்னுட்டு H1B lottery results க்காக wait செய்து, hand wash செஞ்சு,கண்ணாடில ரஜனி style ல hairs கலைச்சிண்டு வெளியேறனும் குயிக்கா, கூட்டத்தோட கூட்டமா.

Next Challenge. Ditto for Paper Cups -drinking water .ஒரே ஒரு water dispenser கிட்ட தான் cups தொங்கிண்டிருக்கும்.ரண்டு இருந்தும்.தாட்டு ஸ்வரம் மாதிரி, தாண்டி லாவகமா cup வாங்கனும்.அன்னிக்கி ஒரு மாமா வேகமா அந்த பூச்செண்டை இழுக்க, யல்லா cup ம் கீழே விழுந்தன்.மணி அப்போ 6.55 pm.first bell அடிச்சிருப்பா!தருமி மாதிரி புலம்ப விட்டுட்டாரே!

நல்ல seat ஐ இன்னிக்கி தியாகம் பன்ன வேண்டினதுதான்.பின்குறிப்பு:கூட்டம் இல்லாத நாளில் high inventory of consumbales.!!


*************************************************************************************


ரண்டு பேர் சேர்ந்து பாடறச்சே


தக்ளூன்டு latency வரத்தான் செய்யும்.


பக்ஷே ,அன்னிக்கி very late ncy!



1 ம் நம்பர் த்வைதமு சுகமா முடிச்சு


அத்வைதமு சுகமா ஆரம்பிச்சுடுத்து.


2 ம் நம்பர் மெதுவா த்வைதமு சுகமாவை ஆரம்பிக்றது.


சுகம் இல்லே


சோகம் தான்.


இந்த latency


கச்சேரி முழுவதும் வ்யாபித்திருந்தது.



Comments

Popular posts from this blog

Quality of Music!