குழந்தையும் தெய்வமும்!

 
குழந்தையும் தெய்வமும்!

நிக்கில் பேனர்ஜி கெளசி கானடா ராகத்துடன் கொஞ்சி கொண்டிருந்தார் சிதாரின் வழியாக.
மெல்லிய இழையாக இசை கசிந்தது.
இப்பொழுது அவன் தூங்கி கொண்டிருந்த குழந்தையை
கண் கொட்டாமல் பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.
கழுத்தில் ஆலிலை கிருஷ்ணர்
டாலருடன் மெல்லிய தங்கச் சங்கிலி.
கால்களில் வெள்ளி கொலுஸு.
கைகளில் கருப்பு வளையல்களுக்கு
இடையே தங்க வலையல்கள்..
மற்றும் தாயத்து.
சீராக மூச்சு வந்து கொண்டிருந்த போது,குழந்தை தூக்கத்தில் சிரித்தது.
'பெருமாள் பூவை குழந்தையிடம் காட்டுகிறார்' என்று பாட்டி இருந்தால் சொல்லுவா.
கரு கருவென்ற முடிக்கற்றை மின் விசிறியின் காற்றில் ,முன் நெற்றியில் வந்து விழுந்தது.
அதை சரி செய்ய எத்தனித்து கைகளை பின் வாங்கிக் கொண்டான்.
தூக்கம் கலைந்து விடுமோ என்று.
திரைச்சீலை வேகமாக ஆடியது வலுவான காற்றில்.
ஜன்னல் வழியாக பார்த்தால் வாணத்தில் கருமேகக் கூட்டம்.
இரண்டு காய்ந்த இலைகள் பறந்து வந்து ஹாலில் விழுந்தன.
சாலையில் போவோர் நடையின் வேகத்தை கூட்டினர் மழையிலிருந்து தப்ப.
பளீர் பளீர் என்ற மின்னலுக்கு பிறகு பயங்கரமாக இடி இடித்தது.
கோடை மழை பரம சுகம்.
அர்ஜூனா அர்ஜூனா அர்ஜூனா என்று மனதில் சொல்லிக் கொண்டான்.
குழந்தை எழுந்து விடுமோ என்ற யோசணை அவனுக்கு.
ஆனால் அந்த இடி சப்தத்திலும் குழந்தை அசந்து தூங்கி கொண்டிருந்தது!
குழந்தைகளுடைய உலகமே தனி!
கல்யாண சத்திரத்தில் நாகஸ்வரம் மற்றும் மேள சப்தங்களுக்கிடேயே குழந்தைகள் அசந்து தூங்கும்.
ஆனால் வீட்டில் ஒரு switch on செய்யும் சப்தத்துக்கு கூட எழுந்து விடும்!
இரண்டாவது முறையாக குழந்தை தூக்கத்தில் சிரித்தது.
ஆலிலை கிருஷ்ணர் புஷ்பத்தை குழந்தையிடம் காட்டி விளயாடுகிறார் போலும்.
சட்டென்று கோடை வெக்கை தணிந்தது.
காக்கைகள் கரைந்து கொண்டே இங்கும் அங்குமாக பறந்து திரிந்தன.
ஒரிரு மழைத்துளிகள் பூமியை முத்தமிட்டது.
ஹால் நன்றாக இருட்டி விட்டது.
பூஜை அறையின் ஐந்து முக குத்து விளக்கின் வெளிச்சம்தான் இப்போ.
தாழம்பு மணத்துடன் ஊதுவத்தி புகை.
கொள்ளை அழகுடன் குழந்தை.
Indeed,the ambience with mesmerizing Raag Kausi Kanada looked divine.
வீட்டிற்கு நேர் எதிரே கோவிலின் கோபுரம் தெரியும்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.
குழந்தைக்கு கோவில் வசிக்கின்ற பசுங்கன்றுவிடன் விளையாடுவது ரொம்ப இஷ்டம்.
பசுங்கன்றும் குழந்தையை பார்த்தவுடன் சற்றே துள்ளிக் குதிக்கும்.
குழந்தை கன்றுவின் முதுகை தடவும்.
குழந்தையை கன்றுவிடமிருந்து பிரிக்கும் போது தலையை திருப்பி
ஏன் எங்களை இதற்குள் பிரிக்கிறாய்?கண்களாலேயே கேட்கும்!!
சரி என்று சிறிது நேரம் விட்டு விடுவான்.
கன்று வாத்ஸல்யத்தோடு குழந்தையை பார்க்கும்.
Two kids are in communion.
Non verbal communication.
Those few minutes seem eternal.
Only love exists!
மழை நின்றவுடன் பசுங்கன்றை காண்பிக்க வேண்டும் என்று நிணைத்துக் கொண்டான் as it is a daily routine.
சட்டென்று குழந்தை திராட்சை பழம் போன்ற கண்களை திறந்து,அவனை பார்த்து வசீகரமாக சிரித்தது.
long eye lashes added beauty!
கை காலை உதைத்து என்னை எடுத்து கொள்ளேன் என்ற அழைப்பு விடுத்தது.
வாரி எடுத்துக் கொண்டான்.
வேற்று முகம் இல்லை குழந்தைக்கு.
அழவே இல்லை!
தீக்ஷண்யாமாக அவனை கண் கொட்டாமல் பார்த்தது.
காந்த கண்கள்!
வசீகரமான முகம்.
அவன் குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டபோது,
He felt that he is holding something Precious & Sacred!
குழந்தைகளுக்கென்று ஒரு தனி வாசணை உண்டு.
அதே நுகர்வது சுகமே!
குழந்தை இப்பொழுது அவன் தோள் பட்டையை ஜொல்லொழுக கடிக்க ஆரம்பித்தது.
மிக மெதுவாக குழந்தையை திருப்பின போது ,தன் பிஞ்சு விரல்களால் அவன் விரல்களை இணைத்துக் கொண்டு மறுபடியும் ஒரு சிநேகமான சிரிப்பு.
ஆஹா!
அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளுக்கு வலிமை போதாது.
இப்போ அவனின் சட்டை பொத்தாணை இழுக்க முயன்று தோற்றுப் போனது.
மிருதவான கன்னத்தில் அவன் ஒரு முத்தா குடுத்தான்.
சர சரவென சப்தத்துடன் மழை வலுத்த
தை குழந்தை ஆச்சிரியத்துடன் திரும்பி பார்த்தது.
ஜன்னலருகே சென்று குழந்தைக்கு இரண்டு சிட்டுக்குருவிகள் மழையில் நணைவதை காண்பித்தான்.
மாற்றி மாற்றி, சிட்டுக்குருவியையும் அவணையும் பார்த்து விட்டு மொத்த விரல்களையும் வாயில் அடைத்துக் கொண்டது.
இப்பொழுது அவன் குழந்தையின் கைகளை எடுக்க முயலவில்லை.
its a natural actuvity for kids.
should be left alone.
சாரல் தெறித்ததால் திரும்பி ஹாலில் தஞ்சம்.
குழந்தைக்கு அம்மா ஞாபகம் வந்திருக்கும் போல.
மடியிலிருந்து இறங்க எத்தனித்த குழந்தையை ஜாக்ரதையாக தரையில் விட்டான்.
உடனே வேகமாக தவழந்து சமையல் அறை நோக்கி பயணித்தது கொலஸு சப்தத்துடன்.
தவழும் குழந்தையின் அழகே அழகு.
"ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையிலேந்தி சீராட்டி
பாலுட்டி தாலாட்ட நீ"
ஏனோ அவனுக்கு பாபநாசம் சிவனின் காபி ராக பாடல் ஞாபகத்துக்கு வந்தது.
குழந்தை இப்பொழுது ஒருக்களித்து விழுந்து எழுந்து, தலையை மட்டும் திருப்பி அவனை பார்த்து மறுபடியும் அந்த கள்ளங்கபடமற்ற சிரிப்பை உதிர்த்து விட்டு,இன்னும் வேகமாக சமையல் அறையில் நுழைந்து மறைந்தது.
Joyous Moments!
ஹாய் ரங்கா! நீ எப்போ எழுந்தே?
செல்லத்துக்கு தொப்பா பசிக்கிறதா என்று அம்மா குழந்தையை கொஞ்சுவது காதில் விழுந்தது.
மண் குளிர்ந்தது.
மனஸூம் தான்!
அவன் இந்த நிகழ்வுகளை மட்டும் ரசிக்கவில்லை.
ஜெயந்தி குமரேஷின் சரஸ்வதி வீணையிலிருந்து வரும் மயக்கும் அமிர்தவர்ஷினி ராக ஆலாபணையையும் கூடவே ரசித்து கொண்டிருந்தான்.
66 வது மேளம் சித்ராம்பரியின் ஜன்யம்.
ஆலாபணை முடிந்தது. ஆனந்தாம்ருதகர்ஷினி .......
முத்துஸ்வாமி தீக்ஷிதர் கிருதி ஆரம்பித்தது.
சாக்ஷாத் சரஸ்வதிதேவியே வந்து வாசிப்பது போல இருந்தது.
யப்பா!
என்னமா வாசிக்கறார் !
இந்த பத்ரி சதீஷ்குமார் மிருதங்கத்தை.
மிருதங்கம் பாடுமா?
பாடும் !
அவரின் தங்க விரல்களின் வழியே!

Comments

Popular posts from this blog

Quality of Music!