சங்கீதகிறுக்கல்ஸ் -இரண்டாம் பாகம்

 



சங்கீதகிறுக்கல்ஸ் -இரண்டாம் பாகம்

அபிஷேக் ரகுராமுக்கு இருக்கிற fertile imagine +குரல் வளத்துக்கும் இவரே ஒண்டியா( solo) jugalbandi (north south musical dialogue) பன்னலாம்.அபார ஞானம் & capacity to enthrall the audience.சில artist எந்த ராகம் பாடினாலும் சோபிக்கும்.பிரமாதமாக அமையும். இவர் அந்த category.


*****

Shree Sundarkumar

ஹரிசங்கரை நிணைவுப் படுத்துகிற வாசிப்பு.கொஞ்சும் சலங்கை போன்ற சப்தத்துடன் ,ஆஹா!நிரவல் பிடி கமலா கெளரி..கமலா ஆரஞ்சு மாதிரிதித்திக்றது.cho sweet ya!

******

Like merger & consolidation of public sector banks,sabhas should do the same..to avoid low audience count, even for popular artist's kutcheri. Artists will get demotivated..too many sabhas..too many concerts..poor turnout..its like watching a first division league match with less crowd.Sad situation!

******

Problem of Plenty!

This young vidwan shot to fame ...vertical take-off in few seasons.extraordinary vidwath..no two opinion about it. பக்ஷே lacks sense of proportions. tooo lengthy aalapanas with repetitive sangathis & too much கணக்கு வழக்கு.. mathematical permutations & combinations,redundant kalpanaswarams literally tires the audience..( don't know about accompanists).Rasikas look for mainly melody, suganubhavam, ecstatic moments,உருக்கம்,aeisthatics & variety of kritis.Also he strains his voice frequently.Some introspection is required from his side for course correction for a long haul!


********

Restroom filled with music.அநேகமா இது நடக்கிறது.பாடகர் கடோசி உருப்படி பேஹாக் கில முடிச்சார்னு வைங்க.

Restroom க்கு போறவா,

முடிச்சிட்டு வரவா,முடிச்சிண்டே இருக்கிரவா ,

சில பேர் பேஹாக் கை பாடிண்டுருப்பா.

சில பேர் சபை நாகரிகம் கருதி,humming வோட நிறுத்திடுவா.

சில பிரிகிருதிகள் பல குரல் மன்னன்கள்.MR Radha voice ம் வரும்.

ஸ்ருதி ஸூத்தம்லாம் எதிர்பார்க்க படாது.

(மேடையிலே சில சமயம் ஸுத்தமா வரலயே)

மன்னித்து விட்டு,நாம 'வந்த'காரியத்தை முடிச்சிட்டு,

oh! its my bad ன்னு போய்க்கினே இருக்கனும்.

ஆனா ஒரு physically challenged person(blind) அவர் என்னமா ஆலாபணை பன்றார்.

சில வருஷங்களா பார்க்கிறேன்.கேட்கிறேன்.

interacted with him.அபாரமான knowledge on carnatic music.

you can't miss him.he sits in the second row always.He will sing in the corridors also.

******

ராக ஆலாபணை!

இப்ப உங்ககிட்ட ,அந்த காலத்து,அகர்வால் பவன், பாதாம் அல்வா 3 piece குடுக்கிறான்னு வைச்சுக்கவும்.

நீங்க அதை நெருப்புக் கோழி,மாதிரி லபக் லபக் னு விழுங்கிட்டு ,முழிச்சா நன்னாவா இருக்கும்.

அல்வாவை அனுபவித்து சிறு சிறு piece ஆக கடித்து ,மெதுவாக புசித்தால்,ருசி தெரியும்.

அதே மாதிரிதான் ,ராக structure யை 3 பாகங்களாக பிரித்து, சிறு சிறு சங்கதிகளாக (like MLV) ஆரம்பித்து, வயலினிஸ்ட்டோட ஒரு Conversation வெச்சுண்டு,

medium & long கார்வையாக பாடி,பிருகாக்களுடன் வழங்கி,அனுபவித்து பாடினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

நடுவில் என்ன கீர்த்தணம் வரப்போற்துன்னு ,தக்ளூண்டு clue காட்டினா,நேக்கு பிடிக்கும்.

குதிரை ரேஸ்ல ஒடற மாதிரி பாட ப்டாது.

எடுபடாது.

என்ன பாடினாலும்,எப்படி பாடினாலும் கைதட்டல் தட்டினா,ஸங்கீதம் வளராது.

***************************************************************************************


same day too much bhairavi.

byeravi!


பைரவர் ஒடலாம்.பைரவி ஒடப்டாது.

தவழந்து,நடக்கின்ற,

நடபைரவியின் அழகே அழகு!


******

Just Felt So!

நல்லவேளை!

பவமான சுதுடுபட்டுக்கு

கல கலன்னு

கல்பனா ஸ்வரம் பாடல.

பாடியிருந்தா

கேண்டீன்ல

அந்த தச்சி மம்மூ கூட கிடைத்திருக்காது.

மங்களானி பவந்து!


******


யாரோ B K Raghuவாம் வயலினிஸ்டாம்.


தூள் கிளப்றார் இங்கே. ஆசெம் வாசிப்புயா.


Big Sabash. 1st time listening.


******

Technically Billiant சங்கதியா இருந்து, unmusical ஆ இருந்தால்,அது ரசிக்கும்படி இல்லே.

அது என்ன unmusical?

நம்ம சங்கீதத்துக்கு ஜீவ நாடியே melody தானே.

காற்றினில் வரும் கீதமா இருக்கனும் இல்லையா?

எந்த பிடியை ,ஒரு பிடி பிடித்தாலும் அதுல melody இழையோடிண்டு இருக்கனும்.


இலைன்னா அதுதான் என்னிய பொருத்த வரைக்கும் unmusical.

ஆனா அதுக்கும் applause வந்துண்டு இருப்பது ,கவலை அளிப்பதாக இருக்கு.


*******

Feeling blissful with Jayanthi Kumaresh Veena at Sathyam Cinemas.

ஸரஸாங்கி (27) யின் ஜன்ய ராகமான சிம்மவாஹினி கீர்த்தணை முடிந்தவுடன் ஒரு அமைதி.

அவன் கண்களை மூடிக்கொண்டான்.

அந்த opening gliding note கேட்டவுடனே ,something sacred is going to engulf என்று ஆழ்மனது சொல்லிற்று.

free fall for bundle of thoughts .

எண்ணக் குவியல்கள் சூரியணைக் கண்ட பனி போல் உருகி கரைந்தன.

ஷண்முகப்ரியா (56) ராக தேவதை தூரத்தில் இருந்து புன்னகைத்தாள்.

அடி மேல் அடி வைத்து அரங்கினுள் நுழைந்தாள்.

முதலில் கண்களுக்கு மிக லேசாக வேர்க்க ஆரம்பித்தது அவனுக்கு.

பிறகு சிறு சிறு விம்மலாக ஆரம்பித்தது.

கஷ்டப்பட்டு அடக்க முயன்று தோற்றுப் போனான்.

என்னை தடுக்கப் பார்க்கிறாயா? என்று சிரித்தது அது.

தடுப்பது இயலாத செயல் என்பதை உடனே உணர்ந்து தலை வணங்கிணான்.

என்னுடன் பயணம் செய்.

மிகப் பெரிய பிரம்மாண்ட வெளிச்சத்தை காட்டுகிறேன் என்றது.

பயணம் ஆரம்பம்.

மிக சன்னமான மூச்சு வந்து கொண்டிருந்த தருணத்தில்

பந்து மாதிரி எதோ ஒன்னு வந்து தொண்டையை அடைத்தது அவனுக்கு.

உடனே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான் அவன் ,இருட்டில்.

In physical world itz called absense of light.

அந்த ஒலியும ஒளியும் அவனை வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்றன.

சண்முகப்பரியா மட்டுமே இருந்தது.

தானம் ஆரம்பித்தவுடன்

தானாகவே

அந்த ஆனந்த கண்ணீர் நின்றது.

He is attempting to describe the undescribable.

எழுத்துக்கு அந்த வலிமை இல்லை விவரிப்பதற்கு.

The Word is not the Thing" famous Quote by Krishnaji a.k.a Jiddu Krishnamurthi, who has opened his eyes at the age of 20 ,when he first read his book 'Commentaries on Living' accidently.

அது அவனுக்கு வாழ்க்கையை உற்றுப் பார்க்க வைத்தது.

இந்த தெய்வீக வீணை இசையை அனுபவிக்கதான் முடியும்.

அவனுடைய 50 + வருட listening experience ல ,ரொம்ப அபூர்வ மாக இந்த மாதிரி நடப்பதுண்டு.

இன்னிக்கும் நடந்தது.

அது ஒரு மிகப் பெரிய குடுப்பிணைதான்.

absolute bliss!!

'The thing which is described is not the description" by Jiddu Krishnamurti

Music is a Spiritual Tonic!

Thank you so much for this rare ecstasy Jayanthi Kumaresh

*******

விவாதி ராகம்ஸ் னாலே

விவாதம் தான்னு

காத தூரம் ஒடாதீங்கோ.

Vintage artists like MBK,MLV,SKR,SRajam லாம் விவாதியையும் பாடி,உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தார்கள்.

ராஜபாட்டையில் ,பல்லக்கில் பவனி வந்தார்கள்.

இப்பவம் சில very young artists ,கர்ம சிரத்தையா ,அதுக்காகவே மெனக்கட்டு உழைத்து, பாடி 'ரசிக' ர்களுக்கு 'பிரிய'மா இருக்கா.

ம்ம்..ட்ட்டேளா?

so come out of comfort zone n experiment.

கட்டுப் பெட்டியான ஸீனியர் artists should set the example in this regard.

150 minutes கச்சேரில ஒரு 20 மணித்துளிகள் விவாதிக்கு இட பங்கீடு ஒதுக்கலாமே!

என்ன நாஞ்சொல்றது. ok va?

ராகத்தோட பெயரை announce பன்னிட்டு ஆரம்பியுங்கோ.

இது பண்ணாததனால், ரசிகாஸ் putting long face..

ஞே என்று முழிக்கறார்கள்.

so அரைத்த மாவே அரைக்காதீங்கோ!

இதுல ரசிகசிகாமணிகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

செய்வீர்களா?

நீங்கள் செய்வீர்களா?

Comments

Popular posts from this blog

Quality of Music!