சங்கீதகிறுக்கல்ஸ் -மூணாவது பாகம்

 


சங்கீதகிறுக்கல்ஸ் -மூணாவது பாகம்

Honey!

Who Shrunk my RTP?

"Now we will present a Short Pallavi" என்று உங்களுக்கு சொல்லப்படும்.

18 நிமிடங்களில் மொத்தமும் முடிந்துவிடும்.

இதன் நடுவில் ,

வாம்மா! மின்ன்ல்! மாதிரி,

Rapidfire ராகமாலிகை வேற வரும்.

அந்த காலத்து Boat Mail or இந்த காலத்து புல்லட் Train Speed ல , டக்கு டக்குன்னு ஒரு ராகம் புரியற்துக்குள்ள ,அடுத்த ராகத்துக்கு தாவிடுவார்கள்.

வயலினிஸ்ட் மிலிட்டிரி attention ல வாசிக்கனும்.

டக்குனு ஒரு தீர்மாணத்துக்கு வந்து, பல்லவன் பஸ் மாதிரி,Sudden Break போட்டு RTP க்கு மங்களம் பாடிடுவா.

LCD watch இன்னும் 2 நிமிடம் காட்டும்.

அவசரமான செய்த உப்மா மாதிரி,ஒரு Short Tillana முடித்துக் கொண்டிருக்கையில், தட்டோடு,சன்மானம் கவர் வந்துண்டிருக்கும்.

All Time!


நம்ம சமர்த்தா கேட்டு,RTPயை ,"வெகுவாக ரசித்து", பலமாக, கை எரியர அளவுக்கு தட்டிவிட்டு,(ஆத்துக்கு போய் பர்னால் போட்டுக்கலாம்)


விட்டேத்தியாக ,கேண்டீனுக்கு காபி சாப்பிட token க்கு நிக்கனும்.


*******

அது முக்கியம்னு சொல்லு அவா கிட்ட.

மிக முக்கியம்னு சொல்லிப்புட்டு வந்துடு.

எப்படி Original Passport ,Visa முக்கியமோ ,

அந்த மாதிரின்னு சொல்லு,

மேடை ஏறுவதற்கு இதான் pre requisite ன்னு சொல்லு.

அண்ணா!

இளம் கலைஞர்களுக்கு மட்டுமா?

No.


No


No


இளம் கலைஞர்களுக்கும்,


இளநரை வந்துட்ட


or


வந்து கொண்டிருக்கிற


or


முழு நரை வந்து விட்ட கலைஞர்களுக்கும்


ஏகப்பட்ட விருது வாங்கிய கலைஞர்களுக்கும்,


அடுத்த season ல retire ஆவதைப் பற்றி


ஒரே யோசணையாக இருக்கும்


கலைஞர்களுக்கும்,


பக்க வாத்யாக்காரர்களுக்கும்


சொல்லிபுட்டு வந்துடு.


ஆமாம்.


சரி அண்ணா!


ஸ்ருதி மாதா ன்னு நேர்ல பாத்து சொல்லிட்டு வரேன்.


மங்களானி பவந்து.


***************************************************************************************


இந்த Rest Roomல ஒரு யந்திரம் வச்சிருக்கா பாருங்கோ.


அது என்னன்னு கேட்டேன்.


கையை காயப்போடறதுக்கு


ஸார் ன்னான்.


எப்டி காய போடறதுன்னு கேட்டேன்.


சும்மா கையை அதுக்கு கிட்டே காட்டுங்கோ.அவ்ளவுதான்னு சொல்லிட்டு அவன் பூட்டானா.


சரின்னு ஜாலியா,


ஜாக்ரதையா மொதல்ல 1 Hand ஐ காயப் போடலாம்னு நீட்டி முழக்கி NEET தேர்வுக்கு போற அம்பி மாதிரி Neat ஆ நீட்டினேன்.


அவ்ளவுதான்.


ராக்ஷஸ உறுமல்!!


கை உள்ளே இழுத்திண்டு போகிடுமேன்னு பிராந்தி ஆகிடிச்சி.


அதுவும் Right Handu!! அப்றம் எப்டி FB ல சங்கீத கிறுக்கல்ஸ் லாம் அபாரமா கிறுக்கி, ஏகப்பட்ட லைக்ஸலாம் வாங்கற்து?


போறும் னு ஒடி வெளியே வந்து,ஒஸ்தியான கர்ச்cheap ஐ எடுத்து கையை காயப்போட்டு Iron செஞ்சு ,Q ல நின்றேன்.


ஆனா இந்த சப்தத்தில் மத்த சப்தம்லாம் சப்தநாடியும்,ஒடுங்கி காணமல் போற்து One Positive Aspectu.


இந்த ராக்ஷஸன் பரவாயில்லே.


அந்த சத்யம் அரங்கில் இருக்கே.


அது என்னிய மாதிரி மஹா சாதுவாட்டும் இருக்கு.


பக்ஷே ,பிரம்ம ராக்ஷஸன் ரகம்.


யப்பா.இன்னா Soundu உடற்து.


நம்மிள்கீ இந்த நாகரீக சமாசாரமெல்லாம் சரிப்டாது.


Old Method dhan.


ஒரு யோசணை.


அது ஸயின்ஸ் பிரகாரம் ஸாத்யமான்னு தெரில.


இந்த பிரம்ம ராக்ஷஸ யந்திரத்து உள்ளே பலவிதமான, வாஸானாதி திரவியங்களை ஒரு பக்கட்டி கொட்டினா, வாயு வோட வாசணையும் ஜோடியா வருமோன்னோ!


என்ன நாஞ்சொல்றது?


escape..


*********


Music Academy converted into Meditation Academy!


நேத்திக்கு Blissful கச்சேரி


பம்பாய் ஜெயஸ்ரீ


*************************************************************************************


தேர்க்கூட்டம்,திருவிழாக்கூட்டம் மாதிரி எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம்.தள்ளு முள்ளு.முண்டியடுத்துக்கொண்டு முன்னேறினர். IPO Over Subscribe ஆனா மாதிரி..இன்று அகடமியில் 'சங்கீத கலாநிதி' ஸ்ரீ சஞ்சய்சுப்ரமணியனின் கச்சேரி.கீழ் தளத்தில் Extra Chair போட்ட பிறகும்,ரசிகர்கள் நின்ற திருக்கோலமாக காட்சி தந்து ,கச்சேரியைக் கேட்டனர்.


மேடையில் Feedback Speaker தவிர, மீதி இருக்கும் இடம் முழுவதும் ரசிகர்களின் ஆக்ரமிப்பு.முந்தய கச்சேரிக்கு வந்தவர்கள் மூச்சையும், ச்சாவையும் பிடித்துக்கொண்டு உட்கார நேரிட்டது.எழுந்தால் சீட் அம்பேல்.இதுக்கு முன்னாடி மஹாராஜபுரம் சந்தானம் சங்கீதகலாநிதி பட்டம் வாங்கிய கச்சேரிக்குத்தான் இவ்வளவு கூட்டம் வந்தது..இந்தியா பாக் மேட்ச் ஆரம்பிக்கற்துக்கு முன்னால் இருக்கிற ஒரு எதிர்பார்ப்பு இங்கும் இருந்தது.Wasim Akram முதல் பந்தை முழு வீச்சுடன் ஒரு பவுன்ஸர் போடறா மாதிரி,வனஜாக்ஷி கல்யாணிராக வர்ணத்தை கலக்கலாக ஆரம்பித்தார்..பல்லவி கோபால ஐய்யர் இயற்றியது.அதிலேயே தெரிந்து விட்டது இன்றைய மேட்ச் வின்னிங் மேட்ச்தான் என்று.குரல் இன்று வித்வானுக்கு அம்சமாக அமைந்திருந்ததுதான் காரணம்.Occassionally ஒரு 'கேவல்'வந்ததை நாம் தள்ளுபடி பண்ணலாம்.


அடுத்து ஆனந்த பைரவி ராகம்.தீக்ஷிதரின் கமலாம்பா ஸமாரக்ஷது கீர்த்தணையை வெகு அழகாக பாடினார். next மலயமாருத ராகத்தை வலஜ் ராகம் கலப்படம் இல்லாமல் விஸ்தாரமாக,ஸஞ்சய், ஸஞ்சாரம் செய்தார்.


வரதுவின் வயலின் வயலன்ஸ் இல்லாத சமர்த்து வாத்யம்.வரது கிட்டேந்து வருது பாருங்கோ ஸ்வரபிரஸ்தாரம்..amazing support by him today.பக்க வாத்ய லக்ஷணங்களை நன்கு அறிந்தவர்..பந்தா ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆடியன்ஸை கவர்கின்ற ரசவாதம் தெரிந்தவர்.


சீர்காழி அருணாசலகவிராயரின் 'அனுமனே சாமிக்கிந்த அடையாளம் சொல்லய்யா' கீர்த்தணை. ஸஞ்சய் தமிழ் கீர்த்தணைகளை பாடும் அழகை சொல்லி மாளாது.நமக்கு அர்த்தமும் புரிகிறபடியால் அந்த bhavathai நன்றாக ரசிக்க முடிகிறது.


அடுத்து வந்ததுதான் Master Piece & Highlights of the day..


கானடா ஒரு ரம்யமான ராகம்.22 வது மேளகர்த்தா கரகரப்பிரியாவின் ஜன்யம்.ஸஞ்சய்யின் விஸ்தார ஆலாபனை மனதை உருக்கியது.வரதுவின் reply அதைவிட நன்றாக இருந்தது.வாய்ப்பாட்டில் வராத சில விசேஷ பிரயோகங்களை வாசித்து ஸஞ்சயிடமிருந்து சபாஷ் வாங்கிண்டார். ஆடியன்ஸின் கைத்தட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.சுகி எவ்வரோ ஸுமுகி எவ்வரொ ...ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்தபடி இந்த தியாகராஜ கிருதி வந்தது.Total Silence..Audience went into trance..such a melodious rendition by Sanjay with bhakthi rasam..kudos to the artist..Sankaraparanam is the RTP. percussionist neyveli venkatesh & K v Gopalakrishnan enhanced the quality of this concert.. கடைசியாக பாடிய 'பட்தீப்' ராகம் சொக்கதங்கம்..ஸஞ்சய் ஸங்கீதகலாநிதிதான் என்பது n th time நிரூபணம் ஆகியது. He is a Great artist Par Excellence!


***************************************************************************************


Wow!What a concert by Sangeetha Kalanidhi Designate Kanyakumarigaru @MA today.(+Embar+Patri+Suresh).She Sang through her Violin.She created 7 new ragas in praise of Sapthagiri and she played one of the raga Seshadri (set the Annamacharya kriti)


I thought she was playing the Raga Vaasanthi, before Embar Kannan announcement.


Divi-Raga RTP in Mohanam & Shanmugapriya was captivating.


MLV கிட்டேர்ந்து பிரவாகமா வருகிற சங்கீதத்தை உள்வாங்கிண்டு,நிழல் போல் பின்தொடர்ந்து, திருப்பி எல்லா சங்கதிகளையும் இம்மி பிசகாமல் இவர் வாசிக்கறது கொள்ளை அழகு.இந்த மஹா வித்வானுக்கு எப்பவோ சங்கீத கலாநிதி விருது குடுத்திருக்கனும்.இப்பாவது குடுத்தாளே..#மகிழ்ச்சி#.


இன்றைய கச்சேரி சுநாதம்...சுகானுபாவம்..ரசானுபாவம்..Peroid.


***************************************************************************************


Just Felt So! அந்த விதூஷி போட்டிருந்த வைர அட்டிகை பால்கனியிலும்,சும்மா பள பளன்னு மின்னல் கணக்கா ஜோரா ஜ்வொளித்தது.பக்ஷே சங்கீதம்..கீதம்..தம்..ம்..ம்.ம்..ஜ்வொளிக்கல.ஷோபிக்கல.


***************************************************************************************


குரு 3 வது row ல உக்கார்ந்து, watch பன்னாலே,உள்ளூர கொஞ்சம் உதறும்.


பட்டாம்பூச்சி பறக்கும்.


குருவே பிடில் வாசிச்சா?


புள்ளையாண்டான் குருவை மிஞ்சின சிஷ்யன்.


Fearless,Effortless singing!


***************************************************************************************


யோசி!


தனியை யோசி!


ஆவர்த்தணத்தை யோசி!


தனி ஆவர்த்தணத்தை யோசி!


தனி தனி யாக யோசி!


மாத்தி யோசி!


இது என்ன பல்லவி?


என்ன ராகத்தில்


என்ன தாளம்


சிம்மேந்திரமத்திமம் ?


சிம்ம நந்தன தாளமா?


எடுப்பு பூர்வாங்கம் உத்ராங்கம் அறுதி இறுதி ன்னு என்னமோ சொல்வாளே.


அதெல்லாம் எப்டி வருது?


இது பல்லவி லாம் இல்லே.


ஒரு வித்யாசமான approach to தனி ஆவர்த்தணம் அரங்கேறியது நேற்று.


மொத உருப்படி முடிந்தவுடன்


கடம் வித்வான் வாசிச்சார் தனியாக.


அடுத்த உருப்படி முடிந்தவுடன் கஞ்சிரா வித்வான் வாசிச்சார் தனியாக.


கடோசியாக 3 வது உருப்படி முடிந்தவுடன் மிருதங்கம் வித்வான் வாசிச்சார்.


இப்படி


படிப்படியாக


தனித் தனியாக


தனி ஆவர்த்தணம் அறங்கேறியது!


துக்கடா section ல சேர்ந்து தாள வாத்ய கச்சேரி நடந்தது.


இந்த தொகுதி பங்கீடு நேக்கு நெம்ப பிடிச்சிருக்கு.


தனி ஆவர்த்தணம் போது நடக்கிற exodus,இப்படி பிரிச்சி வாசிச்சா,அவா நம்மள விட்டு பிரிய மாட்டா.


but canteen ல இவாளை எதிர்பார்த்து போட்ட பஜ்ஜிலாம் ஆஆஆறிப் போகிவிடும்.


மங்களம் வரைக்கும் hall ஆள்களோட நிரம்பி வழியும்.


இருக்கு


பிடிச்சி இருக்கு


நன்னா பிடிச்சி இருக்கு


ரெம்ப நன்னா பிடிச்சி இருக்கு


ரெம்ப ரெம்ப நன்னா பிடிச்சி இருக்கு.


தனியை


தனித்தனியாக


வாசிப்பது


பிடிச்சி இருக்கு.


யாராவது இந்த என்னோட பல்லவியை பாடம் செய்யனும்னு


பாடவும் செய்யனும்னு


ஆசை பட்டீங்கனா


ராக தாள விவரங்களுக்கு inbox செய்யவும்.


மாத்தியோசி!!


***************************************************************************************


மொதல் போனி,விரிபோனி பைரவி


கடோசில விரிவான பைரவி!


***************************************************************************************


Hamsanandhi யை


Hindustani flavour ல பாடினா,


Hindustanandhi ன்னு சொல்லலாமா?


Comments

Popular posts from this blog

Quality of Music!