காபி கடாக்ஷம்!
காபி கடாக்ஷம்!
மொத கச்சேரி முடிந்தவுடன் பிரம்மகஷாயத்தை பருகி வரலாம்னு canteen பக்கம் போனா,திருவிழாக் கூட்டம் waveமோதற்து.
எங்க நான் காணாமல் போய்டுவோமோ ன்னு பயமா இருந்தது.
பாதையில் ரண்டு பக்கமும் ticket Q நிக்கற்து.
நடுவில் ஒற்றையடி பாதையில்,two way traffic ல மெதுவா முன்னேறினேன்.
இதுல யார் canteen token/bill வாங்க நிக்கறா? யார் சும்மா chatting nu தெரியாது.அதனால நான் எப்பவுமே கேட்டுடற வழக்கம்.
சார் நீங்க Token Q வா? இந்த கொஸ்ஸினை loop ல போட்டுடுவேன்.
தொல்லை தாங்காம வழியை விட்டுடுவா.
so இப்படியாக வாழ்க்கையில் முன்னேறியிருந்த தருணத்தில்,
Q jumping ஹேப்பனிங்.
எய் ரமேஷ் இந்த Q ல வாடா.
எப்ப வந்த?
நேத்து night.ஒரே jetlag.HK ல டிலே,!
BA வா?
ஆமாம்.
என் row ல உட்கார்ந்து கச்சேரி கேட்ட ஆசாமிகள் Q ல நின்னார்கள்.
நான்தான் உஷார் பார்ட்டியோன்னும்.
எப்பவுமே extra cofee token ஐ 'பத்திரமா'
பாக்கட்ல வைச்சிருப்பேன்.
எப்டியோ முட்டி மோதி காபிக் கடைக்கு வந்தாச்சு.
Ration கடை discipline இங்கே எதிர்பார்க்க கூடாது.
2 பேர் deployed for giving coffee & ஏகாக்ஷரம் a.k.a Tea/டீ.
அதுல ஒருத்தர் கிட்டேர்ந்து காபி வாங்கற்து இருக்கே.
காளை மாட்டுக்கிட்டே கூட பால் கறந்துடலாம்.லேசுல குடுக்க மாட்டார்.
நம்ம கிட்டேர்ந்து மொதல்ல token ஐ மாத்திரம் வாங்கி வச்சுண்டு விடுவார்.ரெம்ப slow.
நடுவில் மடப்பள்ளி உள்ளே போய்டுவார்.எதுக்குன்னு எனக்கு இன்னி வரைக்கும் தெரியல.
ஆச்சா.
இன்னொருத்தர் சுறுசுறுப்பர்.ஆனா கோபக்காரர்.
9 tumblerல காபி டிக்காஷனை கொட்டினார்.
random ஆ குரல்கள் token ஐ அவரிடம் குடுத்தவர்களிடமிருந்து.
எனக்கு சக்கரை இல்லாம!
எனக்கு extra sugar!
எனக்கு strong coffee!
எனக்கு light ஆ வேணும்!
normal காபி குடுங்கோ!
நேக்கு tea குடுங்கோ!
அவர் 9 tumbler ல டிக்காஷன் +பாலை different அளவுல mixing.
இப்ப அவருக்கு problem. customized formula யார் யாருக்கு போய் சேரனும்?
பார்த்தார்.light coffee யாருக்கு?
without sugar யாருக்கு.
எல்லாத்தையும் கேட்டு distribution நடந்தது.
I was particularly interested to know whether he is giving that 'without sugar coffee' to the right customer.
That customer got the coffee with sugar only.
எனக்கு முன்னாடி இருந்த மாமி டீ கேட்டா.
டீ லாம் இல்லை.
token ஐ பறித்துக் கொண்டு காபியை திணித்தார்!
உங்களுக்கு என்ன ன்னு என்னிய பார்த்து கேட்டார்.
எதுவானாலும் பரவாயில்லைன்னு சொல்லிப்புட்டேன் சமயோசிதமாக!
காபி அமையற்து கூட,நம்ம கைல இல்லை.
கிடைச்சதை வச்சி சந்தோஷமா உறுறுறுஞ்ஞ்ச வேண்டியதுதான்.
ஆச்சா.
ரெம்ப சூடு.extra tumbler கேட்டேன்.அவர் வில் போன்ற புருவத்தை, பாலஸரஸ்வதி ரேஞ்சுக்கு உயர்த்தி எடுத்துக்கோன்னு signal குடுத்தார்.
ஆச்சா.
இப்ப exit strategy.
அந்த 45 degree ல ஒரு இரும்ப தூண் இருக்குமே,அதை ஜாக்ரதையா தாண்டி வந்தா ,ஒருத்தரும் வழி விட மாட்டேன்னு படுத்தறா.
எனக்கு என் காபி முக்யம்னு,
Q வில் நின்று கொண்டு.
முன்னாடி இருந்த மாமி wearing fanta orange colour costly பட்டு saree வழி விடல.
பொத்தாம் பொதுவா announce பன்னினேன்.
"காபி கறை லேசுல போகாது".
burning cigarette துண்டை மிதித்தால் போல் ,மொத்த கூட்டமும் reverse gear ல,
அதுவும் fifth gear ல ஜகா வாங்கி வழி விட்டா!

Comments
Post a Comment