மொட்டை மாடி ,மொட்டை மாடி!
மொட்டை மாடி ,மொட்டை மாடி!
இஸ்கூல் விட்டப்றம் தினமும் சீக்கிரமா வீட்டிற்கு வந்து Ovaltin சாப்பிட்டு விட்டு அவசரகதியில் நான் மொட்டை மாடி கிரிக்கட் விளையாட, இந்து தியலாஜிகல் பள்ளி நண்பன் SG Murali ஆத்துக்கு ஓடுவேன்.
அவன் வீடு ஆதியப்ப நாயக்கன் தெருவும் பைராகிமட கோவில் (GMM) தெருவும் சந்திக்கும் இடத்தில் இருந்தது.
ஹோட்டல் பிராகாஷ் பவனின் பக்கத்து வீடு.
நம்ம டர்ண் வரச்சே துணிப்பந்து செஞ்சு எடுத்துண்டு போகனும்.
இல்லைன்னா நோ பர்மிஷன் விளையாடுவதற்கு.
ஆனா அன்னிக்கி Fielding மாத்திரம் செய்யலாம்.
பந்து செய்யும் முறை:
சிறு கருங்கல்லை பழைய வேஷ்டியை கிழித்த துணியில் டைட்டாக நிறைய சுத்து சுத்தி தைச்சிடனும். இன்னும் டைட்டாக இருக்க, பந்தின் மேல் சைக்கிள் ட்யூபை சீராக ஒரே மாதிரி கட் செஞ்சி போடனும்.
Stump க்கு அந்த ஆரஞ்சு கலர் சார்மினார் சிகரட் விளம்பர தகர பலகை தான் எப்போதும் எங்களுக்கு.
அந்த வீடு மொட்ட மாடி மிகப் பெரியது.
கிரிக்கட் ,கபடி,பாண்டி போன்ற விளையாட்டுக்கு உகந்த சிறு மைதானம்.
சாயங்கலாம் ஆனா கிட்டத்தட் ஒரு டஜன் நண்பர்கள் கூடி மொட்ட மாடியில் அட்டகாசம் பன்னுவோம்.
செம்ம ரகளைதான்.
கிரிக்கட் விளையாடச்சே, சில சமயம் சுந்தா ( law college student) ஈஸ்வர் (MBBS Student) வரதன் ( BPharm student) போன்ற சீனியர்கள், வயது வித்யாசம் பார்க்காமல் ,எங்கள மாதிரி பொடி பசங்களுடன் கிரிக்கட் விளையாடுவார்கள்.
ரண்டு டீமாக பிரிந்து விளையாடுவோம்.
நடுவில் பக்கத்து வீட்டு மாடியில் உலர்த்தியிருக்கிற வடாம்,வத்தல் காணாமல் போகும் அபாயமும் உண்டு.
நேக்கு அதில் உடண்பாடு இல்லை.
ஆனால் என்னுடைய பங்கு குடுக்கபடும் போது ,ஏய் ரெம்ப டேஸ்டா இருக்குடா இந்த அரைக்காய்ச்சல்..
நிறைய அள்ளிண்டு வரற்துதானே?
என்ற நான் கேட்பது Partner in Crime ல சேர்த்தியான்னு தெரியாது.
பாவம் சின்ன பையன்தானே நான்.
மன்னிச்சூஸ் செஞ்சிடுங்கோ ப்ளீஸ்.
Batting end எப்பவுமே ஹோட்டல் பிரகாஷ் பவன் ஒட்டல் சிம்னி பக்கம்தான்.
ஒரு சில சமயம் விக்கட் கீப்பர் தவற விட்டு, பந்து சிம்னி உள்ளே விழுந்திருக்கு.
போண்டாவாக மாறினதா என்ற தகவல் இது வரை இல்லை.
பந்தை ரோட்டுக்கு அடித்தால்,அடித்தவன் தான்,கீழே இறங்கி,பந்தை கொண்டு வரனும்.
அன்றைய ஆட்டத்தில் மறுபடியும் பங்கேற்க முடியாது.
அதனாலேயே லொட்டை வச்சி ஆடுவோம்.
என்னதான் சிறிய பந்து என்றாலும் அந்த உயரத்தில் இருந்து விழுந்தால் காயம் பட வாய்ப்புகள் அதிகம்.
அந்த மாதிரி ,தினம் பல ரகளையுடன் அமர்க்களமேட்டிக்கா கிரிக்கட் போட்டி நடை பெற்ற ,ஒரு மாலை வேளையில் தான் அந்த சம்பவம் நடந்தது.
ஈஸ்வர் நல்ல மட்டையடி வீரன்.அவனை லேசுல அவுட் ஆக்க முடியாது.
ஏய் என்னடா பன்றது..எப்படி போட்டாலும் அடிக்கறாண்டா ..
சென்னை 600028 பட டயலாக் மாதிரிதான் ஆடுவான்.
ஆனா எல்லார்க்கும் தனக்கு தெரிந்த வித்தையை சொல்லிக் குடுப்பான்.
முதல் பந்துல அவனுடைய முழங்கை அளவு சுழல் பந்து வீச்சில் , அவுட் ஆனா, பெரிய மனுஷத்தனமா ரண்டாவது சான்ஸ் குடுத்து ஆட வைப்பான்.
ஈஸ்வர் மும்முரமாக ஆடி ரன்களை குவித்துக் கொண்டிருந்தான்.
நன்றாக ஆடுபவர்கள் அந்த குண்டு Bat ஐ தான் (நிஜம் கிரிக்கட் Bat ) செலக்ட் பன்னுவார்கள்.
செம்ம வெயிட்டு. அடி ஒரத்தில கொஞ்சம் பிஞ்சியிருக்கும். Handle ல லப்பர் சுத்தியிருக்கும்.
நல்ல லட்டு மாதிரி ஒரு பந்து வந்து போது இஸ்து அடிச்சான் ஈஸ்வர்.
பந்தோட அந்த குண்டு Bat ம் சேர்ந்து பறந்தது!
Bat ஆகாஷ் missile கணக்கா கன ஜோரா, நேர்த்தியான trajectory யுடன் பறந்துக் கொண்டிருந்தது.
எங்களுக்கெல்லாம் ஆச்சிரியம்.
Wat a Shot ன்னு.
பிரிச்சணையின் தீவிரம் புரிவதற்கு சில வினாடிகள் பிடித்தது.
ஈஸ்வர் நிஜமாகவே ஆடிப் போய்ட்டு கவலை ரேகையுடன் பயந்து, ஈஸ்வரோ ரக்ஷதுன்னு உட்கார்ந்து விட்டான்.
நாங்களும் சுதாரித்துக் கொண்டு Bat போகிற வேகத்துக்கு மொட்டைமாடியிலியே விழுவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என்ற தீர்மானத்துக்கு வந்தோம்.
ஒடி போய் கைப்பிடி சுவர் அருகே அமர்ந்து ஜாலி ஒட்டை வழியாக landing எங்கே ஆகப்போற்துன்னு கவலையுடன் பார்த்தோம்.
அந்த Bat நேரே ,எப்பவும் மாலை வேளையில் சலூனுக்கு எதிரில் நிறுத்தி வைக்கப்படும் பச்சைக் கலர் Willys Jeep Bonnet மேலே பெரிய சப்தத்துடன் விழுந்தது!
எங்களுக்கெல்லாம் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.
சிறு கூட்டம் கூடி அண்ணாந்து பார்த்தது.
யார் மேலயாவது விழுந்திருந்தால் கபால மோக்ஷமேதான்.
சலூன் கடை சேகர் மேலே பார்த்து எங்களை கண்டபடி திட்டி,Bat ஐ எடுத்துக் கொண்டு ,டேய் கீழே வாங்கடா பார்த்துக்கறேன் உங்களைன்னு சொன்னது ஒளிந்திருந்து பார்த்த போது துல்லியமாக கேட்டது.
சிறு கூட்டமும் கலைந்து போனது.
நாங்கள் எல்லாரும் ஈஸ்வரின் கட்டளைப்படி ,மிக நன்றாக இருட்டின பிறகு ஒவ்வொருத்தராக வெளியேறினோம்.
SG Murali கண்டிப்பாக சொல்லிட்டான்.
இனி ஒரு வாரத்துக்கு எங்காத்துக்கு யாரும் எந்த காரணத்துக்கும் வரப்டாதுன்னு.
உங்கள் யூகம் சரிதான்.
நாங்களும் ஏக மனதா ஓ கே டான்னு சொல்லி விட்டோம்!.
Comments
Post a Comment