காக்கா முட்டை

 

காக்கா முட்டை

சில வருடங்களுக்கு முன்பு எதேச்சையாக டிவி யை ஆன் செய்தபோது ஓரு படம்.
டிவி பார்க்கும் பழக்கம் நேக்கு இல்லை..பொதுவாக திரைப்படத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லைதான்.ஆனா ‘காக்கா முட்டை’ என்ற படத்தை பார்த்தேன்.
காக்கா முட்டை காக்காவைப் பற்றியதல்ல!

இரண்டு சிறார்களுடைய பிட்ஸா ஆசைதான் படத்தின் கரு.
300 ரூபாய் சேமிக்க அவர்கள் படும் பாடு..அப்பப்பா சொல்லி, இல்லை பார்த்து மாளாது.சிட்டி வளாகத்தை அன்னாந்து பார்த்து,சின்னது சொல்லும் “டேய்,நிச்சியமா நம்பள உள்ள உட மாட்டாங்கடா’..சிரிச்சின்டே சொன்னாலும் அதில் ஓரு மெல்லிய,இல்லை கனமான சோகம் கசிகறது.இதயம் கனத்தது.கேமரா ஆங்கிள் இந்த காட்சிக்கு அமைத்தது மிக நேர்த்தியானதாக,Depth ஐ கூட்டுவதாக இருந்தது.

புது சட்டையை பண்டமாற்று முறையில் வாங்கி அணிந்து, பையை பேருந்தில் இருந்து தூக்கி எறிந்த சந்தோஷம் பார்வையாளர்களையும் பற்றிக் கொள்ளும் நிச்சியமாக.
தாயாராக நடித்த பெண்மணி ஐஸ்வர்யா நடிப்பு ஒண்ணாங்கிளாஸ்.

எங்கீந்துடா வர்ரீரீங்ங்க?
டேய் உனக்கு பிட்ஸா பிட்ச்சீர்க்காடா ?இது பெரிய காக்கா முட்டை..

சின்னதோட பதில் ..’அய்ய..கொள கொளன்னு கீது’.
பெரிஸு கேக்குது.’டேய் இப்ப இன்னீடா பன்றது?
நான் அப்ப ஆவலுடன் எதிர்பார்த்தேன் என்ன பதில் வரும் என்று?
இடைப்பட்ட nano secondல்…சின்னதோட கள்ளங்கபடமற்ற புன்சிரிப்பையே பதிலாக வைத்த டைரடக்கர் மணிகண்டனுக்கு வைரக்காப்பும் ஆயிரம் கட்டி வராகனும் உரித்தாகுக. 
“இதுக்கு ஆயா சுட்ட தோசயையே துன்னுருக்கலாம்” என்ற சின்ன காக்கா முட்டை பதிலுடன் ‘பவமாண சுதடுபட்டு”.

ஓரு சின்ன பட்ஜட்டில் இவ்வளவு ஆழம் நிறைந்த ‘டக்கரான’ படத்தை எடுத்த டைரடக்கரை பாராட்டியே ஆக வேண்டும்.இதே படத்தை இத்தாலியனோ பிரஞ்சுக்காரனோ எடுத்தால் ஆஆ ஹுஹு என்று ஆஸ்கார் ஆஆர்ப்பரித்தரிக்கும்..பாவம் அவனொரு சாதாரன தமிழ்க்குடிமகன்.

During the ad time Manikandan conversed with the 2 boys.
மணிகண்டன் போன் போட்டு சின்னதுக்கிட்ட மொதல்ல சொல்றாரு. டேய் இந்த படத்துக்கு நேஷனல் அவார்டு கிடைச்சிருக்குடா!அப்படியா அண்ணா.நீங்க வச்சுக்கிடங்க நா வந்து வாங்கிக்கீறேன்!!

உனக்கும் கீழே உள்ளவர் கோடி.நினைத்துப்பார்த்து நிம்மதிநாடு.
கண்ணதாசனின் வரிகள்தான் ஞாபகம் வருகுது

Comments

Popular posts from this blog

Quality of Music!