ஸங்கீதகிறுக்கல்ஸ்-5 th பாகம்

 


ஸங்கீதகிறுக்கல்ஸ்-5 th பாகம்

இசை அபிஷேகம் என்று சொன்னால் அது மிகையாகாது. Music Academy யில் நேற்று ஸ்ரீ அபிஷேக் ரகுராமின் கச்சேரி ஹவுஸ்ஃபூல். "நெர நம்மிதிநய்ய" பூச்சி ஸ்ரீநிவாச அய்யங்கார் இயற்றிய கானடா ராக வர்ணத்துடன் மாலை வேளை கச்சேரி கதணகுதூகலமாக களைக்கட்டியது.


"களல நேர்ர்சினா" தியாகராஜரின் தீபகம் ராக க்ருதியை பாடிவிட்டு, தேவமனோஹரிக்கு தாவினார். தேவ காணம்தான்.இந்த மிக ரம்யமான ராகத்தை (கரக்கரபப்ரியாவின் ஜந்யம்) Vintage வித்வான்களிடம் பல வருடம் முன்னால் கேட்டததுதான்.இளம் வித்வான்கள் மறந்தே விட்ட இந்த ராகத்தை அபிஷேக் மிக நேர்த்தியாக கையாண்டவிதம் பிரமிக்க வைத்தது.அடுத்து அவர் 'கல்யாணி'யை ,அழைத்தோடி வந்தார் தர்பாருக்கு. 20 நிமிட கலகலப்பான கல்யாணி ஆலாபனை. இதுவரை கேட்டிராத விசேஷ பிரோயோகங்கள். நடு நடுவில் ஸ்வர பேதம் வேறு. மற்றும் நகாசு வேலைப்பாடுகள், அவுட்வாண சங்கதிகள்.ரசிக சிகாமணிகளை பரவச நிலைக்கு அழைத்துச் சென்று உச்சத்தைக் காட்டினார்.வயலின் மைசூர் நாகராஜின் எதிர் சம்பாவனை அபாரமாக இருந்தது.நிரவல் முடிந்த பிறகு"தனி ஆவர்த்தனம்" என்பது ஒரு புதிய முயற்சிதான்.பத்ரி சதீஷ்குமார் மிருதங்கத்துடன்,கடம் சுரேஷ் கைக்கோர்த்துக் கொண்டு,10000 வாலா மற்றும் இன்னபிற வாணவேடிக்கைகளை காட்டினார்கள்.கரகோஷம் விண்ணைப் பிளந்தது.அதற்கு பிறகு தான் ஸ்வரமாலை..கல்யாணமாலைதான்அடுத்து கானமூர்த்தே ராகத்தை ( மூணாவது மேள கர்த்தா) அறிமுகம் செய்த விதமே கொள்ளை அழகு.தியாகய்யர்வாளின் கானமூர்த்தே கிருதி யை மிகவும் அனுபவித்துப் பாடினார்.அநுபல்லவியில் கீர்த்தனையை ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்பு."பலே, சபாஷ், வாவ்"வந்தவண்ணம் இருந்தன. அடானா ராகத்தை எடுத்தவுடன் உற்சாகம் பற்றிக்கொண்டது ஆடியன்ஸுக்கு.ராகம் தானம் பல்லவி இதில்தான்.நேரமின்மை காரணத்தால் அதிவேகம்..பல்லவியுலும் 'அதி வேகனே' என்று வந்தது பொருத்தமாக இருந்தது. அடுத்து வந்த ராகமாலிகா ராகங்கள் அத்தனையும் மணியானவை.ராகங்கள் பிரவாகமாக கொட்டியது.வயலன்ஸ் இல்லாத வயலின் நாகராஜுடையது.ராகங்களை இழைத்து சிற்பி போல் செதுக்கினார்.ரகு ராம் பக்க,உபபக்க வாத்தியக்கார்களை உற்சாகபடுத்தி பாராட்டிய விதம் எல்லோரையும் கவர்ந்தது.எப்போதும் சிரித்த முகத்துடன் பாடுவது இவரோட ட்ரேட் மார்க்.கடைசியாக பஹாடி ராகத்தை எடுத்தாரா,இல்லை மகுடியை எடுத்தாரா என்று தெரியவில்லை..ரசிகர்களை ஒருவிதமான மயக்க நிலைக்கு எடுத்து சென்றார்.தில்லானா பஹாடியில்தான்.ஆடி பூர அக்காராவடிஸல் சாப்பிட்ட மாதிரி, ஜிஞ்சாமீர்தமாக இருந்தது.பவமான சுடது பட்டுவுடன் மங்களம்.மங்களாநி பவந்து. .இவர் ஒரு'சங்கீத சுனாமி'.ஆனால்மிக நல்ல சுனாமி ரகம்.வித்வானுக்கு ஒரு விண்ணப்பம்.Sense of Proportion தெரியவில்லை.அபிமன்யு மாதிரி சக்ரவூயகத்தில் மாட்டிக்கொள்கிறார்.அவருக்கு திருப்தி வரும் வரை ஒரு ராகத்தை"விட்டேனா பார்!' என்ற அளவிற்கு பாடுவது ரசிக்கதக்கதாக படவில்லை.He is pregnant with abundant imagination.நோ டௌட்.அதுக்குன்னு இப்படியா?இவர் சங்கீதத்தில் பரவசம் இருக்கு..ஆனா 'பக்தி பரவசம்' இல்லை.வருங்காலத்தில் அதுவும்கைகூடும் என்று நம்புவோமாக.பின் குறிப்பு: உள்ளே பல ராகங்கள்"வெளியே"பலகாரங்கள்" By Mint பத்மநாபன்!


*****


காபி கடாக்ஷம்! மொத கச்சேரி முடிந்தவுடன் பிரம்மகஷாயத்தை பருகி வரலாம்னு canteen பக்கம் போனா,திருவிழாக் கூட்டம்waveமோதற்து. எங்க நான் காணாமல் போய்டுவோமோ ன்னு பயமா இருந்தது. பாதையில் ரண்டு பக்கமும் ticket Q நிக்கற்து நடுவில் ஒற்றையடி பாதையில்,two way traffic ல மெதுவா முன்னேறினேன். இதுல யார் canteen token/bill வாங்க நிக்கறா? யார் சும்மாchatting nu தெரியாது.அதனால நான் எப்பவுமே கேட்டுடற வழக்கம். சார் நீங்க Token Q வா? இந்த கொஸ்ஸினை loop ல போட்டுடுவேன். தொல்லை தாங்காம வழியை விட்டுடுவா. so இப்டியாக வாழ்க்கையில் முன்னேறியிருந்த தருணத்தில், Q jumping ஹேப்பனிங் . எய் ரமேஷ் இந்தQ ல வாடா. எப்ப வந்த? நேத்து night.ஒரேjetlag.HK ல டிலே,! BA வா? ஆமாம். என் row ல உட்கார்ந்து கச்சேரி கேட்ட ஆசாமிகள் Q ல நின்னார்கள். நான்தான் உஷார் பார்ட்டியோன்னும். எப்பவுமேextra cofee token ஐ 'பத்திரமா' பாக்கட்ல வைச்சிருப்பேன். எப்டியோ முட்டி மோதி காபிக் கடைக்கு வந்தாச்சு..Ration கடை discipline இங்கே எதிர்பார்க்க கூடாது. 2 பேர் deployed for giving cofee & ஏகாக்ஷரம் a.k.a Tea/டீ. அதுல ஒருத்தர் கிட்டேர்ந்து காபி வாங்கற்து இருக்கே..காளை மாட்டுக்கிட்டே கூட பால் கறந்துடலாம்.லேசுல குடுக்க மாட்டார்.நம்ம கிட்டேர்ந்து மொதல்லtoken ஐ மாத்திரம் வாங்கி வச்சுண்டு விடுவார்.ரெம்பslow.நடுவில் மடப்பள்ளி உள்ளே போய்டுவார்.எதுக்குன்னு எனக்கு இன்னி வரைக்கும் தெரியல ஆச்சா. இன்னொருத்தர் சுறுசுறுப்பர்.ஆனா கோபக்காரர். 9 tumblerல காபி டிக்காஷனை கொட்டினார். random ஆ குரல்கள் token ஐ அவரிடம் குடுத்தவர்களிடமிருந்து. எனக்கு சக்கரை இல்லாம எனக்கு extra sugar எனக்கு strong coffee எனக்குlight ஆ வேணும்normal காபி குடுங்கோ நேக்குtea குடுங்கோ அவர்9 tumbler ல டிக்காஷன் +பாலைdifferent அளவுல mixing. இப்ப அவருக்குproblem. customised formula யார் யாருக்கு போய் சேரனும்? பார்த்தார்.light coffee யாருக்கு? without sugar யாருக்கு.எல்லாத்தையும் கேட்டு distribution நடந்தது. I was particularly interested to know whether he is giving that 'without sugar coffee' to the right customer. That customer got the cofee with sugar only. எனக்கு முன்னாடி இருந்த மாமி டீ கேட்டா. டீ லாம் இல்லை.token ஐ பறித்துக் கொண்டு காபியை திணித்தார்! உங்களுக்கு என்ன ன்னு என்னிய பார்த்து கேட்டார். எதுவானாலும் பரவாயில்லைன்னு சொல்லிப்புட்டேன் சமயோசிதமாக! காபி அமையற்து கூட,நம்ம கைல இல்லை. கிடைச்சதை வச்சி சந்தோஷமா உறுறுறுஞ்ஞ்ச வேண்டியதுதான். ஆச்சா. ரெம்ப சூடு.extra tumbler கேட்டேன்.அவர் வில் போன்ற புருவத்தை பாலஸரஸ்வதி ரேஞ்சுக்கு உயர்த்தி எடுத்துக்கோன்னு signal குடுத்தார். ஆச்சா. இப்ப exit strategy. அந்த 45 degree ல ஒரு இரும்ப தூண் இருக்குமே,அதை ஜாக்ரதையா தாண்டி வந்தா ,ஒருத்தரும் வழி விட மாட்டேன்னு படுத்தறா. எனக்கு என் காபி முக்யம்னு.Q வில் நின்று கொண்டு. முன்னாடி இருந்த மாமி wearing fanta orange colour costly பட்டு saree.


பொத்தாம் பொதுவாannounce பன்னினேன்.


"காபி கறை லேசுல போகாது".burning cigarette துண்டை மிதித்தால் போல, மொத்த கூட்டமும்reverse gear ல, அதுவும்fifth gear ல ஜகா வாங்கி வழி விட்டா!


*****


பாமர ரசிகனாக ராக ஆலாபணை பற்றிய ஒரு சிறு நீண்ட வ்யாசம். Opening is very important for playing chess as well as for alapanai. ஆலாபணை யை மூன்று பகுதிகளாக பிரித்து கொண்டு பாடனும்.


1.அம்மாக்கள் குட்டி பாப்பாக்கு ,தக்ளுன்டு ஸுபூன் அளவு ,பாலை பாலாடை வழியாக குடுப்பாளே,அந்த மாதிரி சிறு சிறு சங்கதிகளாக ஆரம்பிக்க வேண்டும். அம்மா,குழந்தை தான் கொடுத்த பாலை முழுங்கி விட்டதா? என்று பார்த்து விட்டுதான்,அடுத்த இஸ்பூன் பாலை புகட்டுவா.( இல்லாக்காட்டி புறைக்கேறிடும்) அதே மாதிரி பாடகர் பிடில் வித்வானிமடமிருந்து தான் போட்ட சங்கதிreturn வருகுதான்னு பார்த்து விட்டு,அடுத்து சிறு சிறு சங்கதிகளாக டெவலப் செஞ்சுண்டே போகனும். Small is always beautiful u know. எடுத்த வுடனே unambiguous ஆ இன்ன ராகம்னு பளிச்சினு தெரியறா மாதிரி பாடனும்.வயலின் ஆர்ட்டிஸ்ட் பாவம் இல்லையா. எல்லாரையும் போட்டுக் குழப்ப கூடாது.


2.இப்போ குழந்தை வளர்ந்து விட்டது.நிலாவை காட்டி கமகம நெய்யுடன் கூடிய பருப்பு மம்மு குடுக்கற மாதிரி சங்கதிகளை விருத்தி பன்ற தருணம். விமானி ஒடுபாதையில் விமானத்தை மெதுவாக செலுத்துவாரே, take offக்கு முன்னாடி அதே மாதிரிmedium length சங்கதிகளை லாவகமாக, கமகக் குழைவுடன் வழங்க வேண்டும். பாயசத்தில் வருமே முந்திரி+ பாதாமஸ் அந்த மாதிரி பிருகாக்களை அப்ப அப்போ மிதக்க விடனும் Plain பாயசம்yummy யா இருக்காது. ஆனா ஒவர் ப்ருகாக்கள் உடம்புக்கு ஆகாது. பிடில் வித்வான் எதிர் சம்பாவணை குடுப்பதற்கு chance குடுக்கனும். கச்சேரி என்பது team work தானே! ராகத்தோட ஜீவ ஸ்வரங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு,ராக ஸ்வரூபத்தை,nuances ஐ ,வல்லின மெல்லின பிரயோகத்துடன் பாட வேண்டும்.வெறும்plain notes நன்னாவா இருக்கும்? embellishments இருந்தாதான் colourful ஆ இருக்கும். கொஞ்சமாhumming,கள்ளக்குரல், fade out பண்ணா அது ஒரு தினுஸா தித்திப்பா இருக்கும்.


3.இப்போATC கிட்டேர்ந்து permission கிடைச்சாச்சு take-off க்கு. இப்பதான் long கார்வைக்கு உகந்த நேரம்.but it should be a smooth take- off. After steadying the plane initially,pilot மாமா20 k to 40 k ft க்கு climb பன்னுகிற மாதிரி,full throat ஆ(like full throttle) வேகத்தை கூட்டி பாடனும்.நடவுலair turbulance வந்தாpilot மாமா சாமர்த்தியமா சமாளிச்சுfying பன்னுவாரே அந்த மாதிரி உச்சத்தை தொடனும். முடியலனா,back off. repetion சங்கதி இல்லாம பாட முடியாதுதான்.minimum is always desirable. Long கார்வை long ஆ இருக்கனும். loooonggg ஆ goods வண்டி மாதிரி,தம் பிடித்து பாடினா நன்னாவே இருக்காது. அன்னி தேதிக்கு அமையற குரலோட பலம்& பலவீனத்தை அறிந்துதான் பாடனும். திருப்பி திருப்பி try பன்றேன்னு, எம் ஆர் ராதா மாதிரி double குரல்ல பாடப்டாது. கெளரவமா gracefull ஆ,மலையிலிருந்து கீழே இறங்கிடனும். ஆனாக்க இந்த வல்லின மெல்லின ப்ரோயகங்களை 3 பகுதிகளிலும் காட்ட வேணும். அது எப்டி இருக்கும்னா அளவோடு சேர்த்த பச்சை கற்பூரம்+ ஏலக்கா+கச கசா பால் பாயசத்துக்கு நிகர். ஊதுவத்தி புகை சுருள் சுருளா மணம் கமழ எழும்புமே ,அதே மாதிரி சுருள் சுருளான குட்டி குட்டி சங்கதிகள் பேஷ் சபாஷ் ஆஹாwow type பாராட்டுகளை வரவழைக்கும். மின்னல் வெட்டின மாதிரி பிருகாக்கள் அவசியம் இங்கே. Scope இருந்தா ஜிலு ஜிலுன்னு hindustani type சங்கதிகளையும் ஒரு பிடி பிடிக்கலாம்.ஒரேடியா இறங்க ப்டாது. Graha bedam பாடினால் கைத்தட்டல் நிச்சியமாக உண்டு.ஆனால் அதோட அளவு எப்பிடின்னா, ஒரு rainbow வரச்சே பிரமிப்புடன் பார்த்து ,வியந்து மனஸும் தேஹமும் லேசாவதை போல் உணர்ந்த தருணத்தில் ,சடாரென்று கண் சிமிட்டலுடன் tata see you later ன்னு வானவில் ,வானில் மறையுமே ,அந்த அளவுதான் அளவுகோல். ரொம்ப பன்னா ராக மாலிகையான்னு கேட்டுடுவா! அடுத்ததுdescending. expert pilot இறக்கறா மாதிரி இறக்கனும் ஆலாபணையை.. must be a very smooth landing. நடுவில் கதம்ப கச்சேரியா slow,medium ,fast pace mix செய்து ,hubrid version கொஞ்சம் பாடலாம். குட்டி பாப்பாவை வாத்ஸலயத்துடன் தூளியில் படுக்க வைப்போமே, அதே மாதிரி medium & small சங்கதிகளுக்கு படிப்படியாக வந்து முடிக்க வேண்டும். அப்பதான் ஆடியன்ஸ் ஒரு விதtrance state ல இருப்பா.


எப்போ ஆலாபணையை முடிப்பது என்பது முக்கியம்.ரொம்ப நீட்டி முழக்கினா repetition தான். audience mobile phone பக்கம் போகாம பார்த்துக்கற்து தான் அளவுகோல்.


ஆலாபாணை நடுவில் எந்த கீர்த்தணை வரும் என்று கோடி காட்டலாம். இல்லேன்னாலும் தோஷம் இல்லை. Popular கீர்த்தணையிலிருந்துinspire ஆகி அபாரமான சங்கதிகளை present பன்னலாமே.


அப்ப அப்போ கண் மூடி பாடலாம்.மொத்தமா மூடிண்டு பாடினால் co artists + audience eye contacts & their reactions கிடைக்காது. அது ரெம்ப அவசியம்for course correction. இந்த மாதிரிலாம் பாடினாதான் நேக்கு பிடிக்கும்.ஹி ஹி .😁😁


*****


Three much Todi! எட்டுத் திக்கிலும்,எட்டாவதைத் தான் பாடுவேன்/வாசிப்பேன் என்று பிடிவாதம் பண்ணாதீர்கள். பத்தாவதுக்கு வாங்கோ! அதுவும் அம்ஸமான ராகம்தான். நாடகப்பிரியா! நீங்கள் செய்வீர்களா?


*****


Nada Inbam!


Like swaraksharam,Dr Renganatha Sharma started the kutcheri with Sourashtram kriti "ரங்கநாதுடே" aligning with his name beautifully.(தஞ்சை பொன்னய்யா கிருதி).Purandaradasa's Karaharapriya kriti was presented neatly, after a brief alapanai.Swarakalpanas -fresh from garden type.Next the nectar started flowing in the form of raga alap of 72 nd melam Rasigapriya.விஸ்தாரமான ஆலாபணை ரசிகர்களுக்கு பிரியமாக இருந்தது.அருள் செய்ய வேண்டுமய்யா .. the great post trinity composer Koteeswaraiyer's kriti.impressive gamakams.super kalapanaswarams evoked loud applause.then came the dikshidar kriti ' mamava raguveera' in Ragam Mahiri.swarams were presented effortlessly.fast tempo அய்யர்வாள் kriti வர ராக லயக்ஞலுin Chenchkamboji was sung .3 continuous Sixers! of vivadi/infrequent ragams to my liking..me an addict to such apoorva ragams.Thodi is the center piece..nicely started, in an unhurried manner.he was top class in weaving this ragam like kanchi பட்டு புடவை..he travelled in all three octaves..took us to stratosphere..dived to the ocean of மந்தரஸ்தாயி..and came out with the pearl which triggered a round of applause.the neraval of dikshidar kriti கமலாம்பிகே embellished with gamakams..மல்லிச்சரம் போன்ற ஸ்வரங்கள் showed his high quality manodharmam.RTP in Nattaikuranji..in general ,vidwans compose most of the pallavis on Lord Muruga only..I am not complaining.post RTP melody /suganubhavam was oozing out in the form of Kapi raga alap. ஒரு விதமான மயக்க நிலைக்கு அழைத்து சென்றார். really intoxicating. கைவிடலாமோ காத்தருள்வாய் கிருதி. (composer?). நிறைவாக பஹாடி தில்லானா..ஸ்ருதி ஸூத்தம், அபாராமான கற்பணை,ஸாஹித்ய உச்சரிப்பு ready to come out of comfort zone & experiment..are the forte of this great vidwan..All the accompanists collaborated very well & enhanced the quality of this concert.


*****


சும்மா இதே topic ல bore அடிக்காதடான்னு சொல்றது காதில விழற்து. பக்ஷே, இது கொஞ்சம் வித்தியாசமானது. அந்த மாமிக்கு சுமார்70 வயஸ்.. இல்லே, 72 தான் சரியா வரும்.சங்கீத ஸீஸன் ஆச்சே. 3.58 pm.எனக்கு பக்கத்து ஸீட்ல வந்து உக்காந்தா. வைரத் தோடு சும்மா டால் அடிக்கி.கைல red color dairy plus blue color pen. 3.59 pm.மின்னாடி row ல நேர் எதிரா ஒரு தம்பதி வந்து அமர்ந்தா.that young man 40+ is a tall boy design. இந்த மாமி அவா கிட்ட,நீங்க கொஞ்சம் தள்ளி உட்கார மிடியுமா? நேக்கு மறைக்கற்து.அவா இம்மீடியட்லி obligingu. மொத பாட்டு ஹமீர்கல்யாணி TRS mama வர்ணத்திலேர்ந்து, todi & tani முடியறவரைக்கும் கண்ணே தொறக்கல. நேக்கு பிராந்தி ஆயிடுத்து. அது சரி..தூங்கற்துக்கு எதுக்கு அந்தtall boy ஆசாமியை நகரச் சொல்லனும்? பாதமே துணை பரமசிவா வலஜில சிவன் கீர்த்தணை ஆரம்பிச்சது. பேனாவை எடுத்து,மளமள்னு ஒரு உருப்படி விடாம அல்லாத்தையும் dairy ல எழுதினா பாருங்கோ. அப்ப இத்தனை நாழி தூங்கல..மெய்மறந்து ஒரு வித மோன நிலையில் இசையை ரசித்துக் கொண்டிருந்தார். நானும் இருக்கேனே! வந்தமா, சங்கீதத்தை ரசிச்சோமா, போனோமான்னு இல்லாத வேண்டாத அக்கப்போரைல்லாம் கிறுக்கன் மாதிரி( அது என்ன மாதிரி...அசல் தான்) கிறுக்கிண்டு? அந்த மாமிக்கிட்டே கத்துக்கனும் ஞான். சில foreigners ஆல்ஸோ இப்டிதான் கண்ணை மூடிண்டு ரசிச்சிட்டுப்போறா. வலஜி பாட்டு முழுவதையும் வரிக்கி வரி பாடினா. அப்றம் ஒரு நீண்ட கொட்டாவி.. RTP ஆரம்பிச்ச உடனே கண்ணை மூடி ரசித்தல். இன்னிலேர்ந்து no கிறுக்கல்ஸ்.


*****


In Cricket & Music one should retire when giving peak performance. பழைய பெருங்காய டப்பா வாசணை. பெருங் காயம் இல்லாமல் தப்பனும். சிறுசுகள்லாம் என்னமா ஆடறது,பாடறதுகள். selectors தான் கவனிக்கனும்.


*****


e-kutcheri ஒரு மடிக்கணினி a.k.a Laptop வை குடுங்கோartist கிட்ட. 1. They can type Ragam, Talam, Kriti, Composer,RTP details in the laptop app. 2.Once they press Submit tab,the same will be displayed in the big screens ,kept at both sides of the hall. 3.If the list of songs are preloaded by the artist, then they can select the song from LOV(list of values) & Submit. இதல்லாம் எதுக்குன்னு கேட்டேள்னா, This will avoid SGA(Small Group Activity) by the audience in identifying the ragam. No more confabulations, murmur, whispers, debates etc., which is quite a distraction for enjoying the mujic. Let us start the mujic silently & njoy! என்ன நாஞ்சொல்றது?ஆங்! சொல்ல மறந்து பூட்டேன். Co-Artists க்கும் தெரியரா மாதிரியும் display வைங்கோ.


*****


When an artist start an infrequent/vivadi/apoorva raga, (which itself not happening nowadays is another subject) I wish they announce the name of the ragam first..else unncessary confabulations,guess work,murmurs start amoung the rasigas..sometimes wrong raga names also spread.Infact I would even suggest for each piece,names of ragam, talam, composer are announced by the artist.for the most popular Vadapigana in Hamswadni also!! Vintage rasigas may get irritated but for the" first time" rasigas of carnatic music (or irregular rasigas) it will definitely help them to learn more about our invaluable & unique music system in the world.we may loose some fence sitters who are inclined to come into the carnatic music world, for lack of such vital information.Some of the other composers keerthanams look similar to Dikshidar's kriti.Some composers do not have their Mudra in their songs.Hence the request for this announcement by the artist.Anyway lnstrumentalists MUST announce these details for obvious reasons.The other day a vidwan started ragam Bhavapriya..most of the audience concluded it is Supapantuvarali intially.then the artist announced the raga name,talam & composer.Again many assumed that the song was from a famous composer..but not till the vidwan announced different composer's name.. Let us follow AII India Radio method to focus on music & avoid guess work.


*****


குட்டீயூன்டு sms தான். மூணே words plz come ramki உடனே ப்ரஸன்னமாயிற்று தோடி ராக தேவதை. எழுந்தோடி வந்தது. ramki ஸ்வாகதம் ,ஸூஸ்வாகதம் என்று இருகரம் கூப்பி வரவேற்று ஸிம்மாசனத்தில் அமரச்செய்யும் காட்சி அரங்கேறியது. இடுப்பில் துண்டுடன் பய பக்தியுடன் மனமுருகி பாடினார். பின் அதனுடன் தரையில் விளையாட கூப்பிட்டார்.தேவதை சிநேக பாவத்துடன் செளஜன்யமாக பழகியது. அதனை மடியில் வைத்துக் கொஞ்சினார். தேவதைக்கு பொய்க் கோபம் காட்டினார். தோடி புன்னகைத்தது. கடோசியாக வித்வான் ramakrishnamurthy சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கியதை மெச்சி,ஆசீர்வதித்து தோடி கோடியில் காணாமல் போனது. முழித்துப் பார்த்தேன். oh! This is MA the king of sabha and temple of music. this iz called out of the world xperience!


Yet another success story..from LA 2 MA!


******


Grand Vocal Concert by Sangeetha Kalanidhi Dr Sowmya SrinivasanRKSriramkumarNarayanan NeyveliChandrasekara Sharma


எப்படி பாடறார்!! யப்பா! வார்த்தைகளுக்கு வலிமை இல்லை,இதை விவரிக்க.. கேட்டுதான் அனுபவிக்க வேண்டும்! 'பாடி' ராக RTP யை!


"பாடி முக்தி பெற வேண்டும் இறையை குருவையை இசையை பாடி முக்தி பெற வேண்டும்!"


என்ன ஒரு பிரமிப்பான மேதாவிலாசம்! இந்த RTP யை கேட்டவர்களுக்கு முக்தி நிச்சயம்!


*****


Some Live to Eat! in Sabha Canteen. instead of Eat to Live. y'day one lady grinder ரேஞ்சுக்கு அரைச்சிண்டே இருந்தா inside the hall too. big popcorn pocket,french fries,cola லாம் இன்னும் வரல.


*****


In the middle of a சொதப்பல் கச்சேரி மாமா: துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? கள்ளக் குரலில் மாமியை பார்த்துப் பாடினார். மாமி:இதுக்குதான் அப்பவே சொன்னேன்.இந்த கச்சேரி வாண்ம்னு.இப்போ யாழ்க்கு எங்கே போற்து? எசைப்பாட்டு from மாமி துன்பம் நேர்கையில் பர்ஸை எடுத்து கேண்டீனுக்கு போக மாட்டீரோ? மாமா: மஞ்சப் பையை துழாவி,எங்கே மணிபர்ஸை காணோம்? மாமி: mind voice .க்கும்.அரை மணியில் ரண்டாவது துன்பமா? ஹே! குருவாயூரப்பா! நீங்களும் சொதப்புவேள்னு தெரியும்.அதான் நானும் பர்ஸை கொண்டு வந்திருக்கேன்.சீக்கிரம் எழுந்துருங்கோ. கூட்டம் வரதுக்கு மின்னாடி பிரம்மகஷாயத்தயாவது சாப்பிடலாம்.தலைவலி மண்டையை பொளக்கிறது.


*****


அர்ஜூன் கும்மாரு வாசிண்டுருக்கார் இப்போ. சும்மா 'கும் கும்'னு இருக்கு மிருதங்'கும்' தீயா வேலை செய்யராரு! பலே!Big Sabash!


*****


ஆஹிரி யை கேட்க ஆரம்பித்தேன். கேட்டேன். அப்புறம் கேட்க நான் இல்லை. ஆஹிரி மாத்திரம் தான்!


*****


சபா கேண்டீனனில் ஒரு scene. சரக்குமாஷ்டர்to his ஒற்றன் என்னடா? பார்த்தயா? நன்னா கேட்டாயா? ஒற்றன்: பார்த்தேன். கேட்டேன் அண்ணா. நீங்க கரெக்ட்டா சொன்னேள். அதேதான் நடக்க போற்து. நான் ஆட்டோ பிடிச்சி நிமிஷத்திலexrta மாவை கொண்டு வரேன். நீர் தீர்க்கதரிசி அண்ணா! ச.மா: ஐல்தி...ஜல்தி..ஷீக்கரம் போழ்டா.(வத்தலபாக்கு+புகையில அடக்கிண்டு) பேஷிண்டே நிக்காதே! டேய் ராமாஞ்சு..தேங்கா சட்னி போறுமா பாரு. அநேகமா இது நடக்கலாம். Prime slot லundeserving artist மஹா சொதப்பல் கச்சேரிகளுக்குat 7.30 pm சிறிது நேரத்தில் cash register in canteen மூணாம் காலத்தில் வேகமா சுற்றுதல். அந்தseat ல யாராவது வராளா? ஆமாம்.மாமா கை அலம்ப போயிருக்கா.வருவா. கேண்டீனில் கூட்டம் wave மோதற்து.


*****


Grand Violin Duet by Sangeetha Kalanidi Kanyakumari AvasaralaEmbar KannanKVPrasadUdupiSridar


வயலின் பாடுமா? பாடிண்டு இருக்கு இப்போ. தோடி ஸ்வரஜதியில். out of the world experience. now மயக்கும் சேஷாத்ரி ராக கீர்த்தண. This ragam is one of the 7 ragams created by kanyakumarigaru. Annamacharya kriti tuned by her. சங்கரனுக்கு பின் ஷண்முகம் தானே! After Sankaraparanam,now Shanmugapriya RTP


*****


NRI வித்வான்/விதூஷிஸ் லாம் சக்கை போடு போடற்துகள்.ரெம்ப ஒஸ்தியான ஸங்கீதம்.ஜோரா பாடறா,வாசிக்கறா. ரொம்ப பெருமையா இருக்கு. எங்கயோ கண்கானா தேசத்திலிருந்து, அங்கே இருக்கிற குருவிடமும்,இங்கே இருக்கிற குருவிடம் workshop/skype வழியாக,கற்று தேர்ந்து, LA to MA prime slot க்கு வரறதுங்கற்து, சாதாரணமான விஷயம் இல்ல. மிகவும் பாராட்டபட வேண்டிய சமாசாரம்ஸ். Compared to the eco system & proximity to Gurus for the Madras based students, they do not have that kind of luxury. But still it is amazing to note that they are competing with local artists and perform equally or even better than local artists in some cases. They are also well educated from American universities and persued their passion & took music as their profession. Now global carnatic music talents are spread all over the world. It is amazing to note that their pronounciation/diction are so good and admirable. Kudos to the new breed of gennext artists!


*****


சற்றே விலகும் பிள்ளாய்! திரை இன்னும் விலகவில்லை.நான் எப்பவும் உட்காறrow ல( seat 25..பட்டா லாம் கிடையாது) entry குடுக்கிறேன். row ல8 th seat. காலை தூக்கி நின்று பாட்டை(மனதுக்குள்ளதான்) பாடிண்டே ,கொஞ்சம் கொஞ்சமாக bangalore traffic மாதிரி முன்னேறினேன். நடுவில் ஒருsudden break. அந்த மாமி கேட்டாளே ஒரு கேள்வி! நீங்க உள்ளோ போகப் போறேளா? what an intelligent question! my mind voice.பின்னே, காலங்கார்த்தால 4 மணிலேர்ந்துqueue ல ,குளிர்ல கால் கடுக்க நின்று, முள்ளங்கி பத்தை மாதிரி,இத்தினி துட்டு கொடுத்து ground floor டிக்கட் வாங்கிட்டு ,உள்ளே போகாம,வெளியிலே போகனுமா? நான் எதுவும் பதில் சொல்லல. கொக்காட்டம்,ஒற்றை காலில் நின்ற திருக்கோலம். அவாத்து மாமா கணைத்து.. 'காலை நகர்த்து.அவர் போகட்டும்.' மாம்பலம் ரயில்வே கேட் open பன்னப்பிறகு,பாய்ஞ்சி போவாளே,அந்த மாதிரி முன்னேறி,இருக்கையில் வந்து அமர்ந்தேன். தடங்கலும்,திரையும் விலகியது. சில நேரங்களில் சில மனுஷிகள். Cool.


*****


துக்கடா,விருத்தம், tail piece,filler ராகத்தையலாம் main/ sub main itmes ஆ பாடினா, கண்டா முண்டா சாமான்களைலாம் போட்டு, உருட்டறா மாதிரி இருக்கு. கச்சேரியில ஒரு தொய்வு வரத்தான் செய்யும். ஸ்வாரஸ்யம் will go southwards. Menu is very important அமைச்சரே! பார்த்து செய்யுங்கோ!


*****


தச்சி மம்முவை ரொம்ப மோசமால்லாம் பன்னமுடியாது. அது மாதிரிதான் காபி ராகம். நிணைச்சாலும் மோசமா பாட முடியாது. எவ்வளவு ஆத்தினாலும் சுவை குறையாது. அந்த மாதிரியான டிஜைன் காபி ராகம்.


*****


வர வர ஸ்ருதி குறைஞ்சிண்டே வருது.. வேர்க்கிறது. நான்AC ஐ சொன்னேன்! வருஷா வருஷம் வர அந்த NRI மாமா மாதிரி அரை டெளஸர்தான்.cut பனியன்தான், நாளைலேர்ந்து.. இடதுபக்கம் சரியா5 வது சீட். அந்த மாமி உஷார் பார்ட்டி ..


கச்சேரிbuzz flyer யோட வந்து விசிறிண்டிருக்கா.


*****


BGM with Cello & Double Bass ஆரம்பிக்ற மாதிரி, ராம நீ சமானமெவரு ஆரம்பம்now. உபயம்:ஆடியன்ஸ்


*****


என்னமோ grahabedam ,கிரகபேதம்ன்னு சொல்வாளே. நானும் waiting, waitinger, waitingest. ஒன்னியும் காணோம். தெகிரியமா இறங்கி பன்னுங்கப்பா. atleast season லயாவது. (ஸ்ருதி பேதமானதை ஒரு சில இடங்களிலில் கேட்டு'மகிழ்ந்தேன்')


*****


அட்டகாசமான ஆலாபணை/கல்பனாஸ்வரம்s பாடற்து வித்வத். அதை எப்போ முடிக்கனும்கற்து மஹாவித்வத்! how much is three much?


*****


கச்சேரியில் கைத்தட்டுவதுப் பற்றி சிறு குறிப்பு வரைக(5 மார்க்) ஆலாபணையோ நிரவலோ இன்ன பிற சமாச்சாரம் முடிந்த பிறகு


*சிலர் ரண்டு கையையும் கிட்ட்டக்க கொண்டு வந்து, மத்தவா ஆரம்பிக்கட்டுமே ன்னுbrake அப்ளையிங் & ஷ்டாப்பிங்.


*சிலர் இஸ்கூல்ல காப்பியடிக்கற கடைக்கண்ணுடன் பார்த்து மொதல் கைதட்டிங் வந்தவுடன் சேர்ந்திசை.


*சிலர் மொத்த கைதட்டல் முடியும் போது தான் ஆரம்பிப்பார்...இன்னாது காந்தி செத்துட்டாரா type.


*சிலர் ஆத்துல கோச்சிண்டு இங்க வந்து கைதட்டலுக்கு கா வுட்டுடுவா. *சிலர்vgp மாதிரி தவணை முறையில்..tubelight flickering type.


*சிலர் எதுக்கும் இருக்கட்டும்னு ஜோரா கைதட்டுவார்.அது ஏடாகூட வில்லங்க கைதட்டல் ஆகிடும்.தர்பாரேsilent mode ல இருக்கும் போது..பண்ணலாமா?


*சிலர்Zen type..no claps ya.


*சிலர் நெசமாவே நன்னா இருந்தா மத்தவாளை பத்தி கவலைப்படாமா ஆத்மார்த்தமா கைதட்டுவா.(என்னிய மாதிரின்னு வெச்சுக்கோங்களேன்.புரியற்துக்காக சொன்னேன்.) இவரோட மத்த பரம ரசிகர்களும் இந்த ஜோதில ஐக்யமாடுவா.


*மத்தப்படி instant coffee மாதிரி பலே! ஆஹா! சபாஷ்! லாம் individual contribution சுடச்சுட வரும்.


*****


after attending 1.30 to 3.30 kutcheri, ஒரு வாய் காபி சாப்ட்டு, 3.50 க்குள்ள வரிசையில நின்னாதான், 4 மணி கச்சேரிக்கு முன் வரிசைல இடம் கிடைக்கும்.ஆனாcanteen ல 3.40 க்குதான் counter open பன்றா. இந்த வருஷம் பித்தளை டபரா டம்ளர் ..மகா உஷ்ணம்.bill போட்டு காபி யை க்யூல வாங்கி,(without gloves)சிந்தாம சிதறாம,நெருப்புக்கோழி மாதிரி காபியை லபக்னு சாப்ட்டு ,seat க்கு வரத்துக்கு 4.10 ஆகற்து..இது light snacks இல்லாம. அதெல்லாம் வாங்கினா RTP க்கிதான் வரமுடியும். படா பேஜாரா கீது பா! nation wants to know (arnab shhtyle) why the canteen cannot be kept open without a break? ரசிகாள்லாம் பாவமில்லையா? நீங்கள் ஆவன செய்வீர்களா? செய்வீர்களா?


*****


சுத்தசாவேரியை மணிக்கனக்கா போராடி பாடினா,bore அடிக்கத்தான் செய்யும். அதுக்கு'சுத்தமான' சாவேரி தேவலை. விஸ்தாரமா பாடக்கூடியscope இருக்கிற ராகம் அது. உருகலாம். உருக்கலாம் கரைந்து ,காணாமலும் போகலாம்,சாவேரியில். பார்த்து செய்யுங்கோ.


*****


பாடகி தோடி ஆலாபணையை ஆரம்பித்ததான் தாமதம்.பக்கத்து ஸீட் மீஸை மாமா ஒரு வித பரபரப்படன் காணப்பட்டார்.பையிலிருந்து அவசரமாக ,தேடி ஒரு வஸ்துவை கண்டுபிடித்து வெளியே எடுத்தவுடன் முகமலர்ந்தார். இடது பக்கம் ஒரு சர்ர்ர் ,வலது பக்கம் ஒரு சர்ர்ர்.எடுத்தது அழகான வெள்ளி நாஷிகாசூர்ணம் டப்பி. பீரங்கிபோன்ற இடது,வலது நாசிஸ் லோட் செய்யப்பட்டன..மிச்சம் மீதியை ஒரு ஒதறல் ஒதறினார். நிமிர்ந்து உக்கார்ந்தார்,மந்தஸாஸ புன்னகையுடன். தோடியை ரசித்து ,பலே ன்னார். நான் எனக்கு வந்த ராஷஸ தும்மலை கஷ்டபழட்டு அடக்கி வாசித்தேன். 20 வருஷம் மேல ஆச்சு..மூக்குப் பொடி டப்பாவலாம் பாத்து.இந்த பழக்கம் இன்னும் இருக்கா? ஆனால் மேடையில் இன்றும் வித்வான்கள் லாகிரி வஸ்துக்களை, நாசூக்காக தள்ளி மெல்வதை பார்க்க முடிகிறது.ரண்டு ஸீட் தள்ளி ஒரு மாமா,கண்ணை மூடிண்டு, ஒரு வித ஜென் நிலையில் ,அந்த காலத்து மாட்டுப் பெண்கள் மாதிரி ,தலையை குனிந்து,நிலத்தை நோக்கி உக்காந்திருந்தார். அவருடைய ரஸிகத்தன்மையை மெச்சினேன்.பாடகி தானம் ஆரம்பித்தார். பிறகு வந்ததே சோதணை! இவரும் இஸப்பாட்டை ஆரம்பித்தார்! கர்ர்ர்...புர்ர்ர்..கர்ர்ர்ரா..புர்ர்ரா.. கும்பகர்ண ராகம்,காட்டுத் தாளம். பட்டப்பா தளிகை..25 degree AC..Free Kutcheri..excellent lighting ambience perfect combination for hybernation. வேற row க்கு மாறமுடில..many rows full இருந்தாலும் இசையை அனுபவித்தேன். அடியேனுடைய design அப்படி!


*****


அநேகமா கடைசி பாட்டு, rest room ல மறு ஒலி பரப்பப்படும். in different srutis & shades. (Pavamaana Suthudu Pattu தவிர)


*****


மொத ரண்டு நாளையிலேயே தெரிஞ்சுடும். தொண தொணன்னு பேசற கோஷ்டி எதுன்னு. எங்க உட்காரலாம்னு நோட்டம் விடும்போது ,இந்த அராஜக கும்பல்ஸை நோட்டீஸ் பன்னிட்டு ரண்டுrow தள்ளி குந்திக்கவும். இல்லன்னா பாடகர் பைரவியோ சாளகபைரவியோ வஸந்த பைரவியோ சிந்து பைரவியோ... எந்த பைரவியை பாடினாலும் இவா உடற சவுண்டுக்கு எல்லாமே பாதாள பைரவி மாதிரிதான் கேட்கும்.. sound party!! என்ன ட்ட்டேளா?


*****


பக்கத்தில் இருக்கும் யுவதி ஆர்மோனியப் பெட்டியை திறந்து வாசிக்கறா. opened மடிக்கணினிa.k.a.Laptop & replying several mails and texting in Whatsapp alternatively.யப்பா இன்னா speed. graph n dashboard..பெரீய்ய ஆபிஸரோ? typewriting ல high speed -state rank ஆ இருக்கும். now கல்யாணியியைKaleidoscope வழியாக வயலினிஸ்ட் காண்பித்து முடித்தவுடன் ,கமலாம்பாம் பஜரே ஆரம்பம்


*****


Gaythri Venkatrahgavan Kutchery


சரியா சொல்லத் தெரியல.. ஆமாம். கானாம்ருதமேதான்!! 29 th melam Dheerasankarabharanam janyam ஹம்ஸவிநோதினி மழையில் ஜாலியாக நணைந்தேன்.. யப்பா! என்ன ஒரு பாண்டித்யம்! ஸ்வாதி திருநாள் மஹாராஜா இயற்றிய கிருதி.. sweet ஆலாபணை.. sweeter நிரவல் sweetest kalpanaswarams. நேக்கு சுகர் ஏறியிருக்கும்.பரவாயில்லை.1 more amaryl போட்டுக்கலாம் ராவிக்கி. பக்க பலமாக மைசூர் பிடில், அருளும் கிருஷ்ணாவும் லயத்தை மெருகேற்றினார்கள். This rendition & musical experience, i will cherish for long. Awesome! Big Big Sabash! இது முடிந்தவுடன் கானாம்ருத பாணம்68 ஜோதிஸ்வரூபிணி ராக கீர்த்தணை..கோடீஸ்வரய்யர் கிருதி. மீண்டும் sugar ஏற்றம்ஸ்!


*****


ரண்டு VVIP இடது புறம் & வலது புறமாக Final Call +Gate Closing announce செய்த பிறகு,boarding pass ஐ உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓஓடி வருவார்களே அந்த மாதிரி ,Ben Jhonson வேகத்தில் வந்துseat ல் அமருதல். நேக்கு ஒன்னு பிரியல.. அந்த ரண்டு பேருக்கும் அவா நாமகரணத்தோட ரிஜர்வடு இருக்கை இருக்க,அமைரிக்கையா அமரலாமே!


*****


From LA to MA! 

Bhava & Brika laden sangeetham is heavenly. From Los Angeles to Music Academy's prime time concert SandeepNaryan's music is improving year by year.Only few artists are gifted to sing brika at breakneck speed in a flash & pleasant to listen also.He started with the auspicious Kalyani(65th) raga varnam vanajakshi (ramanad srinivasa iyengar) comfortably.அடுத்தது கம்பீர நாட்டையுடன் ராஜபார்ட்டையில் பவனி வந்தார்.வா வா சிகிவாஹன the great Koteeswaraiyer kriti.kalpanaswarams are Wow ரகம்.Delhi Sundararajan violin support was crisp & spontaneous throughout.ஆனந்தம்.. பரமானந்தம்.. பிரம்மானந்தம் ஆனந்த பைரவி யை விஸ்ராந்தியாக, பாவத்துடன் பாடியது சிறப்பு. (janyam of natabhairavi) toggling bewteen short & long kaarvais was impressive.he subtly indicated, what kriti he is going to sing in the aalap..yes the most famous thygaraja yoga vaibhavam..gopucha yati & the reversal was presented very nicely.one wonders the greatness of Dikshidar for this master piece.Sandeep soaked the rasigas in Bhakthi..I would say this is the highlight of his concert.next Sivan's Varamu raga kriti(janyam of Karaharapriya) was soothing to the heart.the main item is Ragam Khambhoji (janyam of Harikhambhoji).expansive allapana..in all the 3 octaves travelled effortlessly which brought a very loud applause.everi maata is the kriti.intelligent swarakalpanas..Madurai Mani's stamp of 'gamapamaga rigasariga' in included.(without MMI stamp its incomplete).if you close your eyes & listen its HMV.his master's voice.RTP in Lathangi(63rd) brief but good one.If one has to describe his profile..he is the passionate singer..his high quality music comes out of not அசுர சாதகம்..but தபஸ்! 

Parveen Sparsh as usual gave an excellent support.Venkatraman kanjira & Rajasekar Morsing collaborated very well.Its a sumptuous kutcheri.

Comments

Popular posts from this blog

Quality of Music!