Posts

ஸங்கீதகிறுக்கல்ஸ்-5 th பாகம்

Image
  ஸங்கீதகிறுக்கல்ஸ்-5 th பாகம் இசை அபிஷேகம் என்று சொன்னால் அது மிகையாகாது. Music Academy யில் நேற்று ஸ்ரீ அபிஷேக் ரகுராமின் கச்சேரி ஹவுஸ்ஃபூல். "நெர நம்மிதிநய்ய" பூச்சி ஸ்ரீநிவாச அய்யங்கார் இயற்றிய கானடா ராக வர்ணத்துடன் மாலை வேளை கச்சேரி கதணகுதூகலமாக களைக்கட்டியது. "களல நேர்ர்சினா" தியாகராஜரின் தீபகம் ராக க்ருதியை பாடிவிட்டு, தேவமனோஹரிக்கு தாவினார். தேவ காணம்தான்.இந்த மிக ரம்யமான ராகத்தை (கரக்கரபப்ரியாவின் ஜந்யம்) Vintage வித்வான்களிடம் பல வருடம் முன்னால் கேட்டததுதான்.இளம் வித்வான்கள் மறந்தே விட்ட இந்த ராகத்தை அபிஷேக் மிக நேர்த்தியாக கையாண்டவிதம் பிரமிக்க வைத்தது.அடுத்து அவர் 'கல்யாணி'யை ,அழைத்தோடி வந்தார் தர்பாருக்கு. 20 நிமிட கலகலப்பான கல்யாணி ஆலாபனை. இதுவரை கேட்டிராத விசேஷ பிரோயோகங்கள். நடு நடுவில் ஸ்வர பேதம் வேறு. மற்றும் நகாசு வேலைப்பாடுகள், அவுட்வாண சங்கதிகள்.ரசிக சிகாமணிகளை பரவச நிலைக்கு அழைத்துச் சென்று உச்சத்தைக் காட்டினார்.வயலின் மைசூர் நாகராஜின் எதிர் சம்பாவனை அபாரமாக இருந்தது.நிரவல் முடிந்த பிறகு"தனி ஆவர்த்தனம்" என்பது ஒரு புதிய முயற்ச...

SPB

  https://www.facebook.com/vedantham.narayanan/posts/10217835027528838

ஸங்கீதகிறுக்கல்ஸ்-4 th பாகம்

Image
  ஸங்கீதகிறுக்கல்ஸ்-4 th பாகம் அட ராமா! ராமப்பிரியா(52) ராகம் காணாமல் போகற்துக்கு மின்னாடி, யாராவது பாடுங்கப்பா! இப்படிக்கு ராமப்பிரியன். ******* ரண்டு பேர் சேர்ந்து பாடறச்சே தக்ளூன்டு latency வரத்தான் செய்யும். பக்ஷே ,அன்னிக்கி very late ncy! 1 ம் நம்பர் த்வைதமு சுகமா முடிச்சு அத்வைதமு சுகமா ஆரம்பிச்சுடுத்து. 2 ம் நம்பர் மெதுவா த்வைதமு சுகமாவை ஆரம்பிக்றது. சுகம் இல்லே சோகம் தான். இந்த latency கச்சேரி முழுவதும் வ்யாபித்திருந்தது. ******* அந்த காலத்தில RTP என்பது ஒரு serious matter. நேத்து கச்சேரிக்கு போனயே,RTP (ராகம் தானம் பல்லவி) என்ன பாடினா? என்பது தான் முதல் கேள்வியாக இருக்கும்.'ஆனந்தம் தா ' என்பதுதான் இப்போ மருவி தானம் பாடும் போது, ' தொம் தொம் ' ஆகி விட்டது.சுமார் 90 நிமிடமாவது RTP க்கு ஒதுக்கப்படும்.(அங்கவஸ்தரித்தில் கையை மறைத்துக் கொண்டு தாளத்தை போட்டு.. பிடில், மிருதங்க வித்வான்களை அழ வைத்த காலங்களும் உண்டு.) விஸ்தாரமான ராக ஆலாபனை, நான்கு கால நிரவல் மற்றும் கணக்கு வழக்கான ஸ்வரபிரஸ்தாரங்கள்,வசீகரமான ராகமாலிகாவுடன் பக்க ,உப பக்க ,உப உப பக்க (மோர்சிங் மற்றும் கொன்னக...