கச்சேரி அமைத்துக் கொள்வதெல்லாம்!!
கச்சேரி அமைத்துக் கொள்வதெல்லாம்!! ஒரு மாமாங்கம் முன்னால் நடந்த கச்சேரி இது. திரை விலகியது! விதூஷி பஞ்சு மிட்டா கலர் புடவை, மயில் கழுத்துக்கலர் ரவிக்கை. சுமார் 2 லகரத்துக்கு ஆபாரணங்கள் ஜொலித்தது. பிடில் வித்வான் வெங்காயகலரில் ஜிப்பா. மிருதங்கம் மஞ்சா கலரில் ஜிப்பா. கடம் ஆண் மயில் கழுத்துக்கலரில் (ஒடி வந்து அடிக்கற blue color) ஜிப்பா. தம்பூரா மாமியும் நீலக்கலர் புடவை. கரகாட்ட கோஷ்டியைப்பார்த்த மாதிரி இருந்தது. பாடகி 'ஜில் ஜில்' ரமாமணியை நிணைவுப்படுத்தினார். கடம் வித்வான் ஏன் இரண்டு பாணை வைச்சிருந்தார் என்ற கதைக்கு அப்புறம் வரேன். பாடகியின் கணீர்ர்ர் குரல் ஆரம்பம். ஹார்லிக்ஸ்+பூஷ்ட்+காம்ப்ளான் காக்டையில் சாப்பிடறாரா? கிரக ராசி பலன் சரியா அமையல்லனா அன்னிக்கி ,சாரீரம் திடீர்னு பல்லவன் பேருந்து மாதிரி மக்கர் பண்ணிடும். சாரீரம் அம்பேல். சரீரத்திலியும் ரோகம். ராகம் எடுபடல. ஆரம்பித்திலேயே Nose Clearing activity ஆரம்பிச்சாச்சு. ஒரு டப்பா tissue paper காலி. சிந்தி சிந்தி paper ய சந்து வழியா கடம் வித்வான் பக்கம் பாடகி supply செய்த வண்ணம் இருந்தார். இரண்டாவது பாணை அதை போடுவதற்குதான் போலு...